பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டி பிரதேசத்தில்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் . தலைவரும் , அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டி பிரதேச மக்களை இன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.
அமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.
வெள்ளத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டி, வசட்டுவ, மீகொட கொலன்னாவ, வென்னவத்த, புத்கம, களனிபுர பிரதேசங்களுக்கும் அமைச்சர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட அகதிகளின் அவல நிலைகளை அறிந்து கொண்டார்.
வெல்லம்பிட்டி சந்தியிலிருந்து கடற்படையின் படகொன்றின் மூலம் மீகொட கொலன்னாவ, வென்னவத்த, கொடிகாவத்த, புத்கம, களனிபுர, ஆகிய பிரதேசங்களுக்கு சென்று பார்வையிட்டார்.
0 comments:
Post a Comment