கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில்
புதிய மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் வரவேற்கும் நிகழ்வில்
வளவாளர்களினால் கூறப்பட்ட ஆலேசனைகள்
பற்றி
04.05.2016. அன்று ஸாஹிரா
கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் ஒழுங்கு
செய்யப்பட்டிருந்த க.பொ.த. உயர்தர
பிரிவில் இணைந்துள்ள
புதிய மாணவர்களை
சிரேஷ்ட மாணவர்கள்
வரவேற்கும் நிகழ்வில் வளவாளர்களினால் கூறப்பட்ட ஆலேசனைகளும்
மற்றும் சகல
விடயங்களுமே எதிர்காலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு
செல்ல இருக்கின்ற
மாணவர்களுக்கான ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும்
என்பதில் எந்த
சந்தேகமுமே இல்லை.
இந்நிகழ்வினை
இறுதிவரைக்கும் இருந்து அவதானித்ததன் காரணமாக, ஒரு
பெற்றார் என்ற
வகையில் எனது
பிள்ளைகளின் எதிர்காலம் என் கண் முன்னே
தெரிகின்றது. இந்நிகழ்வின் மிகமுக்கியமான
அம்சம் என்னவெனில்
சகல வளவாளர்களுமே
இக் கல்லூரியின்
பழைய மாணவர்கள்,
இங்கிருந்தே பல்கலைக்கழகம் சென்றவர்கள்,
சமூகத்திலே உயர்ந்த இடங்களிலும், நல்ல அந்தஸ்த்திலும்
உள்ளவர்கள். அவர்களுடயை அனுபவங்களும் மாணவர்களுக்கு நல்ல
உற்சாகத்தை கொடுக்கும் என நான் நினைக்கின்றேன்.
இந்நிகழ்வில்
வளவாளர்களாக கலந்து கொண்ட பொறியியலாளர் கலாநிதி.
உ. பாறூக்,
கலாநிதி. றமீஸ்
அபூபக்கர், பொறியியலாளர் ஏ.எம். அஸ்லம்
சஜா, பொறியியலாளர்
ஏ.சி.எம்.ஏ. ஸுஜா ஆகியோர்களுக்கும்,
சிறந்த முறையில்
இதனை ஏற்பாடு
செய்திருந்த கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினருக்கும்,
குறிப்பாக அதன்
செயலாளர் பொறியியலாளர்
எம்.சி.
கமால் நிசாத்,
பொறியியலாளர் ஏ.எம்.சராபத் ஸிமர்,
கல்லூரி அதிபர்
பி.எம்.எம். பதுறுதீன்
சேர், ஏனைய
பிரதி அதிபர்கள்,
உதவி அதிபர்கள்,
பகுதித்தலைவர்கள், மற்றும் ஆசிரியர்கள்
குறிப்பாக அஸ்ஹர்
சேர், நுபைஸ்
சேர், இப்றாஹிம்
சேர், அப்றாஜ்
சேர், மாணவத்தலைவர்கள்,
கலந்துகொண்ட மாணவர்கள், அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள்
மற்றும் இதற்காக
உழைத்த சகலருக்கும்
எனது மனமார்ந்த
நன்றிகளை கல்லூரியின்
அபிவிருத்திக் குழுவின் சார்பாகவும், பயனடைந்த பெற்றார்
என்ற ரீதியில்
தனிப்பட்ட முறையிலும்
தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
எனது அபிப்பிராயம்: பெற்றார்களும்
அழைக்கப்பட்டிருந்தால்
இன்னும்
சிறப்பாக
இருந்திருக்கும்.
ஜஷாக்கல்லாஹு ஹைரன்.
எம்.ஏ. றபீக்
செயலாளர்
பாடசாலை
அபிவிருத்திக் குழு
ஸாஹிறா
கல்லூரி(தேசிய
பாடசாலை)
கல்முனை.
0 comments:
Post a Comment