முன்னாள் ஜனாதிபதியும்,
தற்போதைய குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பில் மஹிந்த ஆதரவு அணியினர் இன்று பாராளுமன்றத்தில் எழுப்பிய சர்ச்சையையடுத்து அவர்களுக்கும் ஆளும் தரப்புக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் திடீரென கைகலப்பாக மாறியது.
இதன்போது ஆளும்கட்சி மற்றும்,
மஹிந்த ஆதரவு அணி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபா மண்ட பத்தின் மத்தியில் ஒருவரையொருவர் தாக்கியதுடன், கட்டிபுரண்டு சண்டையிட்டனர். இதனால் சபை அல்லோல கல்லோலமானது.
குறித்த கைகலப்பின்போது இரண்டு தரப்பினரும் சண்டையில் ஈடுபட்ட உறுப்பினர்களை கட்டுப்படுத்த முனைந்தனர்.
எனினும் இருதரப்பு உறுப்பினர்களும் கும்பலாகவே மோதியதால் எவரெவர் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை அவதானிக்க முடியாத நிலை காணப்பட்டது.
கைகலப்பு நிலைமையானது ஏனைய உறுப்பினர்களினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் உறுப்பினர்களின் காலணிகள் சபா மண்டபத்தில் காணப்பட்டதோடு,
ஆடைகள் கலைந்த நிலையிலும் காணப்பட்டனர். அதேநேரம் சில உறுப்பினர்களின் முகப்பகுதியில் வீக்கங்களும் காணப்பட்டதோடு, ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவர் இரத்தம் வடிந்தவாறு நின்றதனையும் அவதானிக்க முடிந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி.யின் உறுப்பினர்கள் ஆசனங்களுக்கு அருகில் நின்றிருந்ததோடு,
சிரேஷ்ட உறுப்பினர்களும் ஆசனங்களில் கூடிநின்று உரையாடிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் மேதலில் ஈடுபட்ட உறுப்பினர்கள் சிலர் காயமடைந்துள்ள நிலையில் ஐ.தே.க.
எம்.பி.யான சஞ்சித சமரசிங்க மேலதிக சிகிச்சைகளுக்காக உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல்
1.00 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரியா தலைமையில் கூடியது. அதனை தொடர்ந்து சபாநாயகர் அறிவிப்பு மனுக்கள் சமர்ப்பிப்பு என்பன நிறைவடைந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவு அணியைச் சேர்ந்த தினேஷ் குணவர்தன எம்.பி.
ஆசனத்திலிருந்து எழுந்து தான் ஒருவிடயத்தை சபையின் கவனத்திக்கு கொண்டுவர விரும்புவதாக கூறினார்.
முன்னாள் ஜனாதிபதியும்,
பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸவிற்கு இராணுவத்தினர் வழங்கிய பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது என்பதை சபையின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புவதாக குறிப்பிட்டார்.
இத் தருணத்தில் வாய்மூலமான வினாக்களுக்கான நேரத்தில் பின்னர் குறித்த விடயம் தொடர்பான வினாவுக்கு இடமளிப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.
அதனை ஏற்க மறுத்த தினேஷ் குணவர்தன,
ஏற்கனவே இவ்விடயத்தை சபையின் கவனத்திற்கு கொண்டுவந்ததாகவும், அதன்போது சபையின் முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல வாக்குறுதியளித்ததாகவும் சுட்டிக்காட்டினார். அத்தோடு அவருக்கான பாதுகாப்பு உடன் வழங்கப்படுவதை (அரசாங்கம்) உறுதி செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளிப்பதற்கு சபையின் முதல்வரும்,
அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல ஆசனத்திலிருந்து எழுந்தபோது பிரதமர் ரணில்விக்கிரம சிங்க திடீரென எழுந்து குறித்த விடயம் தொடர்பாக பதிலளிக்க முனைந்தார்.
அவருடைய பதிலை குறுகிய நேரத்தில் வழங்கிவிட்டு பாதுகாப்பு விடயம் என்பதால் அது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரும்,
அமைச்சருமான சரத்பொன்சேகா உரிய பதிலை வழங்குவார் எனக் கூறி அமர்ந்தார்.
அதனை தொடர்ந்து பீல்ட் மார்சல் சரத்பொன்சேகாவுக்கு பதிலளிப்பதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.
இருப்பினும் மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவு அணி எம்.பி.க்கள் அனைவரும் ஆசனங்களிலிருந்து எழுந்து கூடி
நின்று கடுமையான தொனியில் வசனங்களை வெளியிட்டனர்.
இவ்வாறான கூச்சலுக்கு மத்தியில் அமைச்சர் சரத்பொன்சேகா தொடர்ந்தம் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
விசேடமாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தொடர்பாக விடயமொன்றை குறிப்பிட்டபோது,
மஹிந்த ராஜபக்ஸ அணியை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் ஒன்றுகூடி கோஷமிட்டவாறு சபா மண்டபத்தின் மத்திற்கு வருகை தந்தனர்.
அத்தோடு நின்றுவிடாது சபாநாயகரை பார்த்து கடுமையான கோஷங்களையும், அவ் அணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எழுப்பினர்.
இச் சம்பவத்தில் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் முன்வரிசையில் அமர்ந்திருந்த பிரதமர் ரணில்விக்கிரமசிங்க,
சபை முதல்வர் உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் இரண்டாவது வரிசையில் உரையாற்றிக் கொண்டிருந்த அமைச்சர் சரத்பொன்சேகா ஆகியோரை சுற்றி வளைத்து நின்றனர். இத் தருணத்தில் படைக்கல சேவிதர்கள், சபாநாயகருக்கும் செங்கோலுக்கும் கடுமையான பாதுகாப்பை வழங்கினார்கள்.
இவ்வாறான நிலையில் மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவு அணியினர் கடுமையான கோஷங்களை எழுப்பியவாறு சபா மண்டபத்தில் தொடர்ந்தும் நின்றுகொண்டிருந்தனர்.
சபாநாயகர் ஆசனங்களில் அமருமாறு உத்தரவிட்டார்.
எனினும் அவர்கள் ஆசனங்களில் அதனைத்தாண்டி கோஷம் எழுப்பியவாறே இருந்தனர்.
நேரம் சரியாக 1.20 மணியாகும்போது பீல்ட் மார்சல், அமைச்சருமான சரத்பொன்சேகாவின் உரையை நிறுத்துமாறு சபாநாயகர் கருஜயசூரிய கூறியதோடு, ஒலிவாங்கியையும் செயலிழக்கச் செய்தார்.
எனினும் சரத்பொன்சேகா தொடர்ந்தும் உரையாற்றிக் கொண்டிருக்கையில் அவருடைய உரையை தொடர்வதற்கான அனுமதிதயை வழங்குமாறு பிரதமர் ரணில்விக்கிரம சிங்க,
சபை முதல்வர் லக்ஷ்மன் கியெல்ல ஆகியோர் சைகையால் சபாநாயகர் கருஜயசூரியவுக்கு அறிவித்தனர். இதனையடுத்து பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா உரையாற்றுவதற்கான மேலதிக நேரம் சபாநாயகரினால் வழங்கப்பட்டது.
இதனையடுத்து கடுமையாக விசனமடைந்த மஹிந்த ராஜபக்ஸ அணியைச் சேர்ந்த தினேஷ் குணவர்தன,
மகிந்தானந்த அளுத்கமே, கெஹெலிய ரம்புக்வெல, பந்துல குணவர்தன போன்றவர்கள் சபாநாயகருடன் கடுமையான தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
அதன்போது அவர்களை ஆசனங்களில் சென்று அமருமாறு சபாநாயகர் கோரினார்.
எனினும் அவர்களை அதனை நிராகரித்து தொடர்ந்தும் கோஷங்களை எழுப்பிக் கொண்டேயிருந்தனர்.
இந்நிலையில் அனைத்து உறுப்பினர்களும் அவர்களது ஆசனங்களுக்கு சென்று அமர்ந்தனர்.
இதன்போது சபையின் இன்றைய நாள பிரதான செயற்பாட்டுக்கு செல்ல வேண்டியுள்ளது என சபாநாயகர் கடுமையான தொனியில் கூறினார்.
இருப்பினும் சபா மண்டபத்தின் நடுவில் ஆளும் மற்றும் மஹிந்த தரப்பின் ஆதரவு உறுப்பினர்கள் கடுமையான தர்க்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். தர்க்கம் வலுவடைந்து கொண்டிருக்கையில் திடீரென ஐ.தே.க.வின் களுத்துறை மாவட்ட எம்.பி.யும், பிரதியமைச்சருமான பாலித்த தேவப்பெருமவுக்கும், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.ம.சு.வின் எம்.பி.யும், மஹிந்த ஆதரவு அணியின் உறுப்பினருமான பிரசன்ன ரணவீர ஆகியோருக்கிடையில் தர்க்கம் முற்றியது. இதன்போது பாலித்த தேவப்பெருமவை பிரதியமைச்சர் சுஜிவசேனசிங்க மற்றும் நலின் பண்டார ஆகியோர் தடுத்துக் கொண்டிருந்தபோது அவர்களை தள்ளிவிட்டு சபைக்கு நடுவில் சென்று பிரசன்ன ரணவீரவை மார்பில் கை வைத்து தள்ளினார். இதன்போது பிரசன்ன ரணவீர ஏதோ கூறவும் அவருடைய முகத்தில் பாலித்த தேவப்பெரும ஓங்கி குத்தினார். இதன்போது இரு அணியினரும் இருவரையும் தடுத்து நிறுத்துவதற்கு முற்பட்டுக் கொண்டிருக்கையில், ஐ.தே.க.வின் கேகாலை மாவட்ட எம்.பி.யுமான சந்தித் சமர சிங்க சரமாரியாக பிரசன்ன ரணவீர எம்.பியை தாக்கினார்.
இதனையடுத்து இருதரப்பினரும் யாரை யார் தாக்குகிறார்கள் என்றியில்லாது பரஸ்பர தாக்குதலையும் தடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டனர்.
எனினும் இதற்கு மத்தியில் பிரசன்ன ரணவீர, சந்தித் சமரசிங்க ஆகியோர் சபைக்கு நடுவில் கட்டிப்புரண்டு ஒருவரையொருவர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதன்போது இருதரப்பு உறுப்பினர்களும் கால்களால் பரஸ்பர தாக்குதல்கள் மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
இதனால் சண்டையில் ஈடுபடுபவர்கள் யார் அதனை தடுக்க முயல்பவர்கள் யாரென அறிய முடியாத நிலை காணப்பட்டது.
சபா மண்டபத்தில் மோதல் உக்கிரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது பிரதமர் ரணில்விக்கிரமசிங்க,
சபைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட உறுப்பினர்கள் எதிர்க்கட்சி கொறடாவும், ஜே.வி.பி. தலைவருமான அநுரகுமார திஸாநாயக உள்ளிட்டவர்கள் சிரேஷ்ட உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் ஆசனத்தில் அமர்ந்திருந்தனர்.
இருதரப்பு உறுப்பினர்களின் மோதலால் சபை யுத்த களமானது.
இந்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கலரியில் அமர்ந்திருந்த பாடசாலை மாணவர்கள் பொது மக்கள் உடனடியாக வெ ளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து இருதரப்பு மோதலை கட்டுப்படுத்த இருதரப்பு சிரேஷ்ட உறுப்பினர்களும் முயற்சித்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரும்,
அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ சபா மண்டபத்தில் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எம்.பி.யுடன் உரையாடிக் கொணடு வேடிக்கை பார்த்தவாறிருந்தார்.
இதன்போது உதயகம்மன்பில,
பந்துல குணவர்தன எம்.பி.க்கள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனிடம் ஏதோ கூறினர்.
அதன்பின் சற்றுநேரத்திற்கு பின்னர் சம்பந்தன் சபையிலிருந்து வெளியேறியிருந்தார்.
ஆளும் தரப்பு அமைச்சர்களான ரிஷாத் பதியூதின்,
மலிக் சமரவிக்கிரம, போன்றவர்கள் மஹிந்த ஆதரவு அணியின் உறுப்பினர்களுடன பேசி அமைதியை ஏற்படுத்த முனைந்தனர்.
15
நிமிடங்களுக்கும் மேலாக அல்லோல கல்லோலப்பட்டு காணப்பட்ட சபையை
1.35 க்கு சபாநாயர் கருஜயசூரிய சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தர்.
பின்னர் 1.29 க்கு பின்னராக 3.00 மணிக்கு மீண்டும் கூடிய சபை இன்று புதன்கிழமை வரை ஒத்திவைப்பதாக அறிவித்த சபாநாயகர் கடுமையான கண்டனத்தையும் வெ ளியிட்டார்.
0 comments:
Post a Comment