பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ள
ஆப்கானிஸ்தானின் “குட்டி மெஸ்ஸி”
கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவனான மெஸ்ஸியின் தீவிர ரசிகனான 5 வயது சிறுவன் முர்டஸா அஹமதியின் குடும்பம் தற்போது பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் காபூல் நகர் அருகே ஜகோரி என்ற கிராமத்தை சேர்ந்தவன் முர்டஸா அஹமதி.
5 வயது சிறுவனான அஹமதி, பிளாஸ்டிக் பையால் ஆன மெஸ்ஸியின் ஜெர்சியை அணிந்து விளையாடுவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இதனையடுத்து மெஸ்ஸியை நேராக சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், மெஸ்ஸி தான் கையெழுத்திட்ட கால்பந்து மற்றும் ஜெர்சியை அஹமதிக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் இவன் தனது குடும்பத்தினருடன் தற்போது பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளான்.
இதுகுறித்து அஹமதியின் தந்தை கூறுகையில், இணையதளங்களில் அஹமதி பிரபலமடைந்துவிட்டதால், தீவிரவாதிகளால் அவனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என கருதினேன்.
தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் மூலம் மிரட்டல் வந்து கொண்டிருந்தன, இதனால் பாதுகாப்பு கருதி பாகிஸ்தானிற்கு வந்தோம் என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment