முன்னாள் சிரேஷ்ட
பிரதிப் பொலிஸ் மா அதிபர்
அனுர சேனாநாயக்கவிடம்
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை?
றக்பி
விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை விவகாரம்
தொடர்பில் கொழும்பு
நகர பிராந்தியத்திற்கு
பொறுப்பான முன்னாள்
சிரேஷ்ட பிரதிப்
பொலிஸ் மா
அதிபர் அனுர
சேனாநாயக்கவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை
நடத்தி வருகின்றனர் எனத்
தெரிவிக்கப்படுகின்றது.
இந்த
விடயம் தொடர்பாக
விசாரணை நடத்துவதற்காக
நேற்றைய தினம்
குற்றப் புலனாய்வு
திணைக்களத்திற்கு வருமாறு அனுர சேனாநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.நேற்றைய தினம்
அவர் குற்றப்
புலனாய்வு திணைக்களத்தில்
ஆஜராகவில்லை.
அனுர
சேனாநாயக்க இன்றைய தினம் குற்றப் புலனாய்வு
திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதுடன் தற்போது அவரிடம் விசாரணைகள்
நடத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
வசீம்
தாஜுதீன் கொலையை மறைத்து அதனை
விபத்து என
சித்தரிக்க அனுர சேனாநாயக்க நடவடிக்கை எடுத்திருந்தாக
குற்றம் சுமத்தப்படுகிறது.
கொலையை
மறைக்க அவர்
கீழ் மட்ட
பொலிஸ் அதிகாரிகளுக்கு
அழுத்தங்களை கொடுத்ததாகவும் விசாரணைகளில்
தெரியவந்துள்ளதாக பொலிஸ் தலைமையக தரப்புத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
வசீம்
தாஜுதீன் கொலையில் முன்னாள் அரசாங்கத்தின்
முக்கியஸ்தரது குடும்ப உறுப்பினர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும்
பேசப்படுகிறது.
0 comments:
Post a Comment