“முஸ்லிம் அரசியல் இயலாமை
நூல் வெளியீட்டு விழா

சாய்ந்தமருது பன்னூலாசிரியர்  ஹாதிபுல் ஹுதா எம்.எம்.எம்.நூறுல் ஹக் எழுதிய முஸ்லிம் அரசியல் இயலாமை எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று 21 ஆம் திகதி சனிக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
டாக்டர். எஸ். நஜிமுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமுமான  எம்.ரி .ஹசன் அலி, கெளரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ஆகியோர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்..

நூலின் திறனாய்வை பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ்வும் . நூல் தொடர்பான கருத்துரையை நவாஸ் செளமியும் நிகழ்த்தினார்கள்.
நூலின் பிரதியை பத்திரிகைகளின் சாய்ந்தமருது பிரதேச  முகவரான சாஹுல்ஹமீது சகுர்தீன் பெற்றுக் கொண்டார்.











0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top