சாய்ந்தமருது கோட்டக் கல்வி அதிகாரியாக
சாய்ந்தமருதைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படாதது ஏன்?
அதிபர்கள், ஆசிரியர்கள் கேள்வி
சாய்ந்தமருது கோட்டக் கல்வி அதிகாரியாக
சாய்ந்தமருதைச் சேர்ந்த ஒருவரை நியமிக்கப்படாதது குறித்து அதிபர்கள்
ஆசிரியர்கள் பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியாக கடமை செய்து வந்த சாய்ந்தமருதைச்
சேர்ந்த ரஹ்மான் என்பவர் திடீர் சுகயீனம் அடைந்ததால் அந்த இடத்திற்கு தற்காலிகமாக
பதில் கடமை செய்வதற்கு கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டக் கல்வி அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார்
என அறிவிக்கப்படுகின்றது. (இவர் மருதமுனையைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது)
சாய்ந்தமருதில் சிரேஷ்ட அதிபர்கள் பலர் இருக்கும் நிலையில் அவர்களில் ஒருவரை
சாய்ந்தமருதுக்கான கோட்டக் கல்வி அதிகாரியாக பதில் கடமை செய்வதற்கு நியமிக்கப்படாமல் கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டக் கல்வி அதிகாரியிடம் பதில்
கடமை செய்வதற்கு அனுமதித்திருப்பது ஏன்? என அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஆகியோர்களால்
கேள்வி எழுப்பப்படுகின்றது.
மருதமுனை, கல்முனைப் பிரதேசத்தின் கல்வியில் ஆதிக்கம் செலுத்துகின்றதா
என்றும் பெற்றோர்களால் வினவப்படுகின்றது.
0 comments:
Post a Comment