கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமதுக்கு
முப்படைகளின் முகாம்களுக்குள் செல்வதற்கு தடை!

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமத்
பங்கேற்கின்ற எந்தவொரு வைபவங்களிலும்
முப்படையினரும் பங்கேற்க மாட்டார்கள்!!



கிழக்கு மாகாண முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்வுகளில் படையினர் பங்கேற்க மாட்டார்கள் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி அறிவித்துள்ளார்.

எந்தவொரு படை முகாமிற்குள்ளும் கிழக்கு மாகாண முதமைச்சர் பிரவேசிக்கஅனுமதியளிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மிகவும் வெறுக்கத்தக விதத்திலான நடவடிக்கைகள் காரணமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமதுக்கு கடற்படை, விமானப்படை மற்றும் இராணுவப் படைகளின் முகாம்களுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
அண்மையில் திருகோணமலையில், சம்பூர் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற வைபவத்தின் போது, கடற்படை அதிகாரியொருவரை மிகவும் கீழ்த்தரமான விதத்தில் திட்டியதையடுத்தே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் பங்கேற்கின்ற எந்தவொரு வைபவங்களிலும் முப்படையினரும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் தீர்மானிக்கப்படுகின்றது. சம்பூரில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான அறிக்கை, கடற்படையினரால், ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top