முதலமைச்சர்
நஸீர் அஹமத் திட்டிய விவகாரம்!
ஜனாதிபதியிடம் கடற்படையின் அறிக்கை
கிழக்கு
மாகாண முதலமைச்சர்
நஸீர் அஹமத், கடற்படை அதிகாரியை
கடுமையாக திட்டிய
விவகாரம் தொடர்பாக
ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக
பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன
ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
சம்பூர்
மகாவித்தியாலயத்தில் நடந்த ஆய்வுகூட
திறப்பு விழாவில்,
சம்பூரில் உள்ள
விதுர கடற்படைத்
தளத்தின், கட்டளை
அதிகாரியான கப்டன் ரஞ்சித் பிரேமரத்னவை, கிழக்கு
மாகாண முதலமைச்சர்
முட்டாள் என்று கடுமையாகத் திட்டியிருந்தார்.
இவ்விவகாரம்
பாதுகாப்புத் தரப்பினர் மத்தியில் கடுமையான அதிருப்தியை
தோற்றுவித்திருந்தது. இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, கடற்படை விசாரணை
நடத்தியிருந்தனர். அவ்விசாரணை
அறிக்கை நேற்று
பாதுகாப்புச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த
நிலையில், குறித்த
அறிக்கையை தாம்
ஆராய்ந்து விட்டு,
ஜனாதிபதியின் ஆலோசனைக்காக உடனடியாக அவரிடம் சமர்ப்பித்து
விட்டதாக, பாதுகாப்புச்
செயலாளர் கருணாசேன
ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment