கிழக்கு மாகாண முதலமைச்சரின்
மேடையேறிய ஆத்திரம்
வரைமுறை தெரியாவிட்டால் இந்த இடத்தைவிட்டு
வெளியேறுமாறு கடற்படை அதிகாரி ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்
அஹமத் மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு
ஒன்றின் மேடையில் வைத்து கடுமையான தொனியில் திட்டியுள்ளார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னண்டோ,
அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்விலேயே முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத் இவ்வாறு
நடந்து கொண்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னண்டோ முதமைச்சரை அமைதிப்படுத்தியும்
அவர் அமைதிப்படவில்லை.
'முட்டாளே,
இங்கிருந்து வெளியே போ. ஒழுங்குமுறையென்றால் என்னவென்று உனக்குத் தெரியாவிட்டால், வெளியே
போ. என்னை நிறுத்துவதற்கு நீ யார்? உனக்கு என்னைப்பற்றி தெரியாது, வாயை மூடு.
(ஆளுநரைப் பார்த்து) ஆளுநரான நீங்களும் கூட, ஒழுங்குமுறை
என்னவென்று தெரிந்திருக்கவில்லை. மரியாதைக்குரிய தூதுவரை நான் மதிக்கிறேன். ஆனால் ஒழுங்குமுறை
உள்ளது. உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் ஆளுநரே, ஒழுங்குமுறையென்றால் என்னவென்று
தெரிந்திருக்க வேண்டும்'
என, அந்தக் கடற்படை அதிகாரியையும் ஆளுநரையும் பார்த்து,
முதலமைச்சர் வசைபாடுவது பதிவாகியுள்ளது
இவரின் இந்த செயல்பாடு குறித்து கடுமையான விமர்சனங்கள் வெளிவந்து
கொண்டிருக்கின்றன.
வீடியோ.............
வீடியோ.............
0 comments:
Post a Comment