வெள்ளம் வடிந்தோடினாலும்
சுவர்கள் மற்றும் மதில்கள்
ஈரமாகியிருப்பதால்
அபாயங்கள் குறித்து எச்சரிக்கை
வெள்ளம் வடிந்தோடினாலும் அபாயங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென கொழும்பு தேசிய வைத்தியசாலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழை வெள்ளம் வடிந்தோடிச் சென்ற போதிலும், சுவர்கள் மற்றும் மதில்கள் ஈரமாகியிருப்பதாகவும் அவற்றின் ஊடாக ஆபத்துக்கள் ஏற்படலாம் எனவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்துப் பிரிவு பணிப்பாளர் சமன்தி சமரக்கோன் தெரிவித்துள்ளார்.
வெள்ள நீர் வடிந்தோடிய காரணத்தினால் மக்கள் வீடுகளில் குடியேற முயற்சிக்கும் போதிலும் ஆபத்துக்கள் குறித்து கவனிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
ஈரமான சுவர்கள் இடிந்து வீழ்ந்து ஆபத்துக்கள் ஏற்படக் கூடும் எனவும் சுவர்கள் நன்றாகக் காயும் வரையில் வீடுகளில் குடியேறுவதனை தவிர்ப்பது நல்லது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment