வெள்ளப் பாதிப்புக்குள்ளான வெல்லம்பிட்டிய
பிரதேசத்தில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர்களும்
கொழும்பு மாவட்ட கட்சித் தொண்டர்களும் இன்று வெள்ளிக்கிழமை வெல்லம்பிட்டிய
பிரதேசத்தில் வெள்ளப் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுக்குச் சென்று பார்வையிட்டனர்.
வெள்ளத்திலிருந்து மீண்டு வரும் மக்களுக்கு அமைச்சர்
ஹக்கீமினால் உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
வெல்லம்பிட்டி கொலன்னாவை கொடிகாவத்தை கொஹிலவத்தை உட்பட
வெள்ளப் பாதிப்புக்குள்ளான பிரதேச மக்களுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின்
தலைமையில் பகல் உணவு கட்சி தலைமையகம் தாருஸ்ஸலாமில் இருந்து அனுப்பி
வைக்கப்பட்டது.
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கு அமைவாக இன்று
வெள்ளிக்கிழமை நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஊழியர்களும் மழையினாலும்
வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
வெல்லம்பிட்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வெள்ளம்
காரணமாக மிகவும் கடுமையாக பாதிப்படைந்துள்ள பிரதேசங்களுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீமின்
பணிப்புரைக்கு அமைய கட்சியின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீனின் வழிகாட்டலில்
மேல் மாகாணசபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன் தலைமையிலான கட்சியின் அனர்த்த நிவாரண
குழு மீட்புப் பணிகளிலும், நிவாரண நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. .
















0 comments:
Post a Comment