ஹஜ் பயணத்திற்கான
முகவர்களை அறிவிக்கும் வரை
முஸ்லிம் சமய விவகார அலுவல்கள்
திணைக்களம் அறிவிப்பு
புனித ஹஜ் பயணத்திற்கான ஒழுங்குகளை செய்யும் முகவர்கள்
பற்றி அறிவிப்பு வெளியிடப்படும் வரை எந்த ஹஜ் முகவர் நிலையங்களிலும் பணத்தைச்
செலுத்த வேண்டாம் என முஸ்லிம் சமய விவகார அலுவல்கள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக
அறிவித்துள்ளது.
முகவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்ட பின்னர்
அவர்களைத் தொடர்பு கொண்டு முற்பதிவுகளை செய்வது சிறந்தது என திணைக்களம்
அறிவுறுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட பல பிரச்சனைகளைப் போன்ற
பிரச்சனைகள் மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்காக இந்த ஏற்பாடடை செய்துள்ளதாக இந்த
திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த அறிவித்தலைக் கவனத்தில் கொள்ளாது மேற்கொள்ளப்படும்
முற்பதிவுகளுக்கு திணைக்களம் பொறுப்பாகாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment