மண் சரிவு
அபாயம் ஏற்பட்ட பகுதிகளுக்கு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம்
மாவனல்லை, அரநாயக்க பிரதேசத்தில் மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நேரடி விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
கொழும்பு பொலிஸ் மைதானத்தில் இருந்து ஹெலிகொப்டர் மூலம் அரநாயக்க சென்றடைந்த ஜனாதிபதி, அங்கு பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது வலியுறுத்தியிருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபாலவின் வருகையை முன்னிட்டு ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரும், கமாண்டோ படைப்பிரிவினரும் அரநாயக்கவில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மண்சரிவினால் சேதமடைந்துள்ள சிறிபுர பல்லேபாகே உள்ளிட்ட பிரதேசங்களுக்கு சென்று மண்சரிவினால் ஏற்பட்ட பாதிப்புக்களை பார்வையிட்டார்.
இடம்பெயர்ந்திருக்கும் மக்களை தங்க வைத்திருக்கும் அரநாயக்க திக்பிட்டிய ராஜகிரிய வித்தியாலயத்திற்கும் ஹத்கம்பலை வித்தியாலயத்திற்கும் சென்று அம்மக்களை சந்தித்த ஜனாதிபதி> அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார்.
அம்மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் குறைவின்றி வழங்கும்படியும் குறிப்பாக அவர்களின் சுகாதாரம் மற்றும் உடல்நலம் பற்றி கவனம் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி அவர்கள்; அறிவுரை வழங்கினார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள்> பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கும் பணியையும் இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான வாழ்வாதார வசதிகளை வழங்குவதிலும் அரசு மிகுந்த பொறுப்புடன் செயற்பட்டு வருவதாக கூறினார்.
அத்தோடு மண்சரிவு கரணமாக இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் குடியமர்த்தும் பணிகளையும் எதிர்காலத்தில் சிறந்த முறையில் திட்டமிட்டு செயற்படுத்துவதாகவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்









0 comments:
Post a Comment