அன்பின் சகோதர சகோதரிகளுக்கு.....

***************************************

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு .


எமது #‎South_East_Welfare_Association ( #‎SEWA ) அமைப்பினால் இன்ஷா அல்லாஹ் , எதிர்வரும் புனித ரமழானை முன்னிட்டு குறிப்பாக நமது தென்கிழக்கு பிரதேச பிரதேசங்களில் வாழும் வசதி குறைந்த மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழக்கூடிய குடும்பங் - களுக்கான புனித ரமழான் முழுவதுமான உலர் உணவுப் பொருட்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கடந்த வருடம் போன்று இவ்வருடமும் " #‎Feed_a_Family " திட்டத்தின் கீழ் உலர் உணவுகள் அடங்கிய பொதிகளை விநியோகிக்கும் முயற்சியை ரமழானுக்கு முன்பதாக மேற்கொள்ள ஆயத்தமாக இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ் .
வாய்ப்பை அளித்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்.கடந்த ரமழானில் ஆரம்பித்த எங்களது இந்த சிறு முயற்சி , இவ்வருடத்தில் கடந்த முறையை விட சிறப்பாகவும் உதவிகளைப் பெற தகுதியான வர்களை சரி வர இனங்கண்டு இந்த திட்டத்தில் இணைத்து செயட்படுத்தபட இருக்கின்றது .
அந்த வகையில் , குறிப்பாக கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்திற்குட்பட்ட வசதி குறைந்த , வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் தொடர்பான தகவல்கள் உங்களிடம் இருந்தால் அக்கடும்பபங்களின் தகவல்களை தனிப்பட்ட ரீதியில் எமது அமைப்பின் Facebook Page Inbox மூலமாக அறியத்தாருங்கள் .
குறித்த குடும்பங்கள் சம்பந்தமான தகவல்கள் அல்லது புகைப்படங்கள் எதுவும் பிரசுரிக்கப்பட மாட்டாது. மேலும் அவர்களுக்கான எங்களின் உதவிகள், பொருள் வினியோகங்கள் உட்பட அவர்கள் சார்ந்த எந்த புகைப்படமோ விபரமோ எம்மால் ஒருபோதும் வெளிஇடப்படவோ பிரசுரிக்கப்படவோ மாட்டாது. அவர்களது தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் .
இது முற்றிலும் இறைவனின் திருப்தியை நாடி ஒவ்வொரு ரமழானிலும் ஏழை எளியோர்களும் மன நிறைவாக ரமழான் நோன்புகள் அனைத்தையும் இனிதே நோற்க நாம் செயற்படுத்தி இருக்கும் மகத்தான ஒரு பணி ஆகவே , இத்தகவல் சேகரிப்பில் உங்களது அயலில் உள்ள மிகவும் வறிய நிலையிலுள்ள குடும்பங்களின் தகவல்களை முகவரியோடு எமது பக்கத்திற்கு inbox செய்து உங்களது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு எமது அமைப்பின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் .
இச் செயற்றிட்டம் , முடிந்தளவு உங்களையும் இவ்வாறான மனித நேய உதவிகளின் பக்கம் ஆர்வமூட்டும் என்பதற்காக குறித்த விடயத்தை தெரியப்படுத்தி இருக்கிறோம் .எனவே உங்களது ஆதரவுகளும் , ஆலோசனைகளையும் #‎Facebook_Page #‎Inbox வாயிலாக வரவேற்கின்றோம்.
நன்றி ,
தென் கிழக்கு சமூக நல அமைப்பு ( #SEWA )
South East Welfare Association - #SEWA

2016/05/10

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top