பல்கலைக்கழகங்களில் பகிடிவதை புரிவோருக்கு
பத்து வருட சிறைத்தண்டனை!
பல்கலைக்கழகங்களில் பகிடிவதை
புரிவோருக்கு எதிராக பத்து வருட சிறைத்தண்டனை
வழங்கப்படவுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிடி
வதையானது இலங்கையின்
சட்டத்தின் கீழ் குற்றமான செயல் என
இலங்கை மனிதஉரிமைகள்
ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அண்மையில்
பல்கலைக்கழகம் ஒன்றில் இடம்பெற்ற பகிடி வதை
சம்பவத்தில்பாதிக்கப்பட்டடோருக்கு பொலிஸார் நியாயத்தைப்
பெற்றுக் கொடுக்கத்
தவறும்பட்சத்தில் அந்த விடயத்தில் மனித உரிமைகள்
ஆணைக்குழு தலையிடும்
என இந்தஆணைக்குழுவின்
சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பகிடிவதை
புரிவோருக்கு எதிராக சட்டத்தின் மூலம் பத்து
வருடங்கள்சிறைத்தண்டனை பெற்றுக் கொடுக்கும்
வாய்ப்பு உள்ளதாக
மனித உரிமைகள்ஆணைக்குழுவின்
முன்னாள் ஆணையாளர்
ப்ரதிகா மஹாநாமஹேவா
தெரிவித்துள்ளார்.
இதேவேளை
அண்மையில் களனி
பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடி
வதை சம்பவமே பகிடி வதைக்கு
எதிராக தற்போது
அனைவரும் குரல்
கொடுப்பதற்கு காரணமாகும்.
குறித்த
பகிடிவதை புரிந்த
7 பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment