பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நிவாரணம் சேகரித்தல்
பிரதேச செயலகங்கள் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும்
கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.அப்துல் கப்பார்
வெள்ளம்
மற்றும் மண்சரிவால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் சேகரிக்கும் பணி, பிரதேச
செயலகங்கள் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும் என
கல்முனை பொலிஸ்
நிலையப் பொறுப்பதிகாரி
ஏ.டபிள்யூ.அப்துல் கப்பார்,
தெரிவித்துள்ளார்.
சீரற்ற
வானிலை காரணமாக
ஏற்பட்டுள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள
மக்களுக்கு அனுப்புவதற்கு என்று நிவாரணம் சேகரிக்கும்
பணியில் அமைப்புகள்
என்ற போர்வையில்
தனி நபர்கள்
ஈடுபட்டு வருகின்றமை
கண்டறியப்பட்டுள்ளது. கல்முனைப் பகுதியிலும்
அதற்கான முயற்சிகள்
எடுக்கப்படுவதாக அறியப்படுகின்றது.
இது
பாரிய மோசடி,
முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகையால், நிவாரணம்
சேகரிக்கும் பணியில் தனி நபர்கள் ஈடுபட
வேண்டாம் என்பதுடன், அவ்வாறு
நிவாரணம் கோரி
வருபவர்களிடம் அவற்றை வழங்க வேண்டாம் எனவும்
பொதுமக்களை அறிவுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு
பிரதேசத்திலும் அவ்வப் பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையில்
பிரதேச செயலகங்களால்
மட்டுமே நிவாரணம்
சேகரிக்க முடியும்.
பொது அமைப்புகள்
இப்பணியில்; ஈடுபட விரும்பினால், பிரதேச செயலகங்களுடன்
இணைந்து செயற்பட
வேண்டும் எனவும் அவர்அறிவுறுத்தியுள்ளார்.

0 comments:
Post a Comment