மே மாதம் முழுவதும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்!
வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
இந்த
மாதம் முழுவதும்
மழை பெய்யக்கூடிய
சாத்தியம் காணப்படுவதாக
வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல்
திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால
இந்த தகவலை
வெளியிட்டுள்ளார்.
தற்போதைய
காலநிலையின் அடிப்படையில் இந்த மாதம் முழுவதிலும்
மழை பெய்யக்கூடிய
சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இடியுடன்
கூடிய மழை
பெய்யாவிட்டாலும் ஓரளவு தொடர்ச்சியாக மழை பெய்யும்
எனவும் திரிவித்துள்ளார்.
பருவப்
பெயர்ச்சி மாற்றங்களினால்
தொடர்ச்சியாக இவ்வாறு மழை பெய்யக்கூடிய சாத்தியம்
காணப்படுகின்றது என லலித் சந்திரபால தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment