துய்யோன் எழுதிய “ஒரு பூ மீண்டும் மலர்கிறது”
நாவல் வெளியீட்டு விழா
(எம்.எஸ்.எம். சாஹிர்)
எதிர்வரும்
19ஆம் திகதி வியாழன் பி.ப 04 மணிக்கு மருதானை தெமட்டக்கொட வீதி வை.எம்.எம்.ஏ கேட்போர்
கூடத்தில் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் தலைமையில், “ஒரு பூ மீண்டும் மலர்கிறது” நாவல் நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
இந்
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா மற்றும் விசேட அதிதிகளாக
வெளிவிவகார அமைச்சின் உயர்அதிகாரி ஏ.எல்.ஏ. அஸீஸ், பிரதம கட்டடக் கலைஞர் எம்.ஐ.எம்.
இஸ்மாயில், சகவாழ்வு அமைப்பின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் அஸ்ரப் அஸீஸ் ஆகியோரும் கலந்து
கொள்ளவுள்ளனர்.
டாக்டர்
அப்துல் கையூம் நூலின் முதற் பிரதியை பெறுகின்றார்.
இந்நிகழ்வில்
வரவேற்புரையை டாக்டர் ஸனூஸ் காரியப்பரும், அறிமுகவுரையை ஓய்வு பெற்ற சுங்கத் திணைக்கள
அதிகாரி முஹம்மத் அலியும், வாழ்த்துரையை ஊடகவியலாளர் முஷ்டீனும், நயத்தலுரையை ஊடகவியலாளர்
அஷ்ரப் ஷிஹாப்தீனும், நிகழ்ச்சித் தொகுப்பை கிண்ணியா அமிரலி மற்றும் சப்னா அமீனும்
நிகழ்த்தவுள்ளனர். இந்நிகழ்வுக்கு அனைவரையும் அன்பாய் அழைக்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.
0 comments:
Post a Comment