ஏமாற்றாதே! மக்களை
ஏமாற்றாதே!1
ஏமாறாதே! அரசியல்வாதிகளிடம் ஏமாறாதே!!
சாய்தமருது தோணா மூலம் சில அரசியல்வாதிகளுக்கும் கொந்திராத்துக்காரர்களுக்கும்
மீண்டும் யோகம்!!!
சாய்ந்தமருது தோணா பிரதேசத்தின் இன்றைய
அவல நிலையையே படங்களில் காண்கிறீர்கள்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் ஏற்பாட்டில் 30 மில்லியன் (3 கோடி ரூபா)
ரூபா செலவில் தோணா பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஏற்பாடுகள்
செய்யப்பட்டன. தோணாவில் இருந்த ஆற்று வாழைகள் பல நாட்களாக பல இலட்சம் ரூபா செலவு செய்து
அகற்றப்பட்டன
அவ்வாறு பாரிய இயந்திரம் மற்றும், லாரிகள் கொண்டு அகற்றப்பட்ட
ஆற்று வாழைகள் மீண்டும் புதிதாக விதைத்து பசளை இட்டு வளர்த்தது போன்று இன்று முற்றாக
வளர்ந்து காட்சியளிக்கின்றது.
தோணா திட்டம் சரியாக வகுக்கப்படாமல் மக்களின் பணம் வீண் விரயம் செய்யப்பட்டதா? இல்லை இத்திட்டத்தை மக்களிடம் முன் வைத்து
இதற்கென ஒதுக்கப்பட்ட பணம் வேறு வேறு திசைகளுக்கு
சென்று விட்ட்தா? என நடுநிலையில் சிந்திப்பவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இவ்வாறு, ஒரு முறையான திட்டமிடல் இன்றி இடம்பெறும் இதன் சுத்திகரிப்பு
பணிகள் மூலம், அரசியல் வாதிகள் மக்கள் வரிப்பணத்தை காலா காலமாக வீணடித்து வருகின்றனர்
என புத்திஜீவிகளால் கவலை வெளியிடப்படுகின்றது.
சாய்ந்தமருது
தோணா பிரதேசம்
தொடர்ந்தும் ஆற்று வாழைகளால் மூடப்படுவதும், அதனை
பல இலட்சங்கள்
செலவு செய்வதாக
மக்களுக்கு தெரிவித்து வைபவங்களை ஏற்பாடு செய்து
துப்பரவு செய்வதும்
எமது அரசியல்வாதிகளுக்கு வாடிக்கையாக
மாறிவிட்டது.
கடந்த
பொது தேர்தலுக்கு
முன்னதாக பல
இலட்சங்கள் செலவு செய்து இதனை துப்பரவு
செய்து ஒரு
தேர்தல் கண்காட்சியும் காட்டப்பட்டதாக
மக்களால் தெரிவிக்கப்பட்டது.
இதன்
இரண்டாம் கட்டம்
இடம்பெறும் என்றபோதிலும் இதுவரை அதை நினைத்தவர்கள்
யாருமில்லை. நினைப்பாருமில்லை.
இது
வரை சாய்ந்தமருது
தோணாவில் முன்னாள்
பிரதி அமைச்சர்
எஸ். நிஜாமுதீன்
அவர்களால் சுமார்
5 இலட்சம் ரூபா
செலவிடப்பட்டு புல்,பூண்டுகள் அகற்றப்பட்டது. கல்முனை
மாநகர சபையால்
10 இலட்சத்திற்கும் மேற்பட்ட ரூபாய்களும்
இவ்வாறே செலவிடப்பட்டன.
இதன் பின்னர்
அமைச்சர் ரவூப்
ஹக்கீம் அவர்களின்
ஏற்பாட்டில் 30 மில்லியன்
ரூபா (3 கோடி
ரூபா) செலவில்
தோணாவை அபிவிருத்தி
செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சாய்ந்தமருது
தோணா 30 மில்லியன்
ரூபா செலவில்
புனரமைப்பு செய்யப்படவிருப்பதாகக் கூறியே
கடந்த ஆண்டு
மே மாதம்
15 ஆம் திகதி
வெள்ளிக்கிழமை முதற்கட்ட அபிவிருத்தி வேலைகளை நீர்
வழங்கல் வடிகாலமைப்புச்
சபை அமைச்சரும்,
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் தேசியத் தலைவருமான ரவூப் ஹக்கீம்
சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தார்.
இவ்வேலைத்
திட்டத்தை இலங்கை
காணி மீட்பு
மற்றும் அபிவிருத்திக்
கூட்டுத்தாபனம் நடைமுறைப்படுத்தவிருப்பதாகவும் இத்திட்டம்
இரண்டு மாதங்களுக்குள்
முடிவுறும் எனவும் மக்களுக்கு அவ்விடத்தில்
காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
தோணா
அபிவிருத்தியின் முதற் கட்டமாக தோணாவை அகழ்வு
செய்து மற்றும்
துப்பரவாக்குவது என்றும் .அதன் பின்னர் பாதுகாப்புச்
சுவர்கள் தோணாவின்
இருமருங்கிலும் கட்டப்படும். அத்துடன் கடல் நீரை
தோணாவுக்குள் செலுத்துவதற்கும் தோணாவிலிருந்து
நீரை கடலுக்குள்
செலுத்துவதற்குமாக மூடித் திறக்கக்
கூடிய பெரிய
அளவிலான குழாய்கள்
அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்து எனத் தெரிவிக்கப்ப்ட்டிருந்தது.
இதன்
பின்னர் முகத்துவாரத்திற்கும்
வைத்தியசாலை வீதிக்கும் இடைப்பட்ட தோணாவின் பகுதி
படகுகள் தரிப்பு
நிலையமாகவும் பாரிய வர்த்தக வலயமாகவும் பொழுது
போக்கிடமாகவும் மாற்றப்படும் என்றும்
வைத்தியசாலை
வீதியிலிருந்து மாளிகைக்காடுவரை தோணாவின் இருமருங்கிலும் நடைபாதைகள
அமைக்கப்பட்டு பூ மரங்கள், ஆசனங்கள்,குடிநீர் வசதிகள்,
குப்பை போடும்
வசதிகள் என்பனவற்றோடு
ஒரு நீண்ட
பூங்கா அமைக்கப்படும்
எனவும் அறிவிக்கப்பட்டது.
2015.05.01ம் திகதி SLLRDC பணிப்பாளர் மௌலவி
SLM ஹனிபா அவர்களின்
அழைப்பின் பேரில்
குழு உறுப்பினர்கள்
சாய்ந்தமருது பி.செயலகத்தில் கௌரவ அமைச்சர்
றவுப் ஹக்கீம்
அவர்களைச் சந்தித்தனர்.
.இச்சந்திப்பின் போது SLLRDC தலைவர், பிரதேச செயலாளர்,
கல்முனை மாநகர
சபை உறுப்பினர்
கௌரவ பிர்தௌஸ்
ஆகியோரும் சில
ஊர்ப்பிரமுகர்களும் பிரசன்னமாகியிருந்தனர்;.இச்சந்திப்பின்போது கௌரவ அமைச்சர் அவர்கள்
சாய்ந்தமருது தோணா அபிவிரத்தி திட்டத்திற்கு திறைசேரி
30 மில்லியன் ருபா ஒதுக்கியுள்ளதாகவும் வேலைத்திட்ட அங்குரார்ப்பண
நிகழ்வு 11.05.2015 இல் நடைபெறும்
எனவும் தெரிவித்தார்.
மேலும் பொறியியலாளர்
ஒருவரின் தலைமையில்
இங்கு காரியாலயம்
ஒன்று அமையவிருப்பதாகவும்
தேவையான இயந்திரங்கள்
இங்கு நிறுத்திவைக்கவிருப்பதாகவும்
குறிப்பிட்டார்.இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு SLLRDC தலைவருக்கும் பணிப்பாளருக்கும்
பணிப்புரை வழங்கினார்.அச்சமயம் குழு
உறுப்பினர்கள் சில விடயங்களைச் சுட்டிக்காட்டினர். பாதுகாப்புச்சுவர்கள் கட்டும்போது
ஆழமாகவும் உறுதியாகவும்
அத்திவாரம் இடல், தோணாவின் உயர்ந்த பகுதிகளிலிருந்து
சல்வீனியா மற்றும்
கழிவுப் பொருட்கள்
நடுப்பகுதிக்கு வராது தடுப்பதற்கான ஏற்பாடுகள், சில
வீடுகளிலிருந்து தோணாவுக்குள் கழிவு நீர் செல்வதைத்
தடுக்க மாற்றொழுங்குகள்,
03 பாலங்கள் நிர்மாணித்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
பாலங்கள் அமைப்பது
தொடர்பாக வீதி
அபிவிருத்தி அதிகார சபையுடன் தொடர்பு கொள்ளப்படும்
என அமைச்சர்
தெரிவித்திருந்தார்.
ஆனால்.
இத்திட்டங்கள் அனைத்தும் தேர்தல் காலத்தை மையமாக
வைத்து மக்களுக்கு
வழங்கப்பட்ட ஏமாற்றுக் கதைகளாகப் போய்விட்டது. ஏனெனில்
மீண்டும் பல
லட்சங்களை ஏப்பமிடத்
சாய்ந்தமருது தோனா ஆற்று வாழை, சல்வீனியா மற்றும்
புல்,பூண்டுகளுடன்
தயாராகிவிட்டது. சாய்தமருது தோணா மூலம் சில
அரசியல்வாதிகளுக்கும் கொந்திராத்துக்காரர்களுக்கும் மீண்டும் யோகம்
பிறந்துள்ளது.







0 comments:
Post a Comment