கல்முனை பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ்
சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள்
அம்பாரை மாவட்ட செயலகத்தில்
ஒப்படைப்பு
நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரணம் வழங்கவென கல்முனை பிரதேச செயலகத்தினால் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களை அம்பாரை மாவட்ட செயலகத்திற்கு கடந்த (20) ஆம் திகதி வழங்கிவைக்கப்பட்டது.
கல்முனை பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள நிர்வாகப் பிரிவு உத்தியோகத்தர்கள், கணக்கு பிரிவு உத்தியோகத்தர்கள், காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள், சமூக சேவைப் பிரிவு உத்தியோகத்தர்கள், திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள், திவிநெகும பிரிவின் கீழான சகல உத்தியோகத்தர்கள் வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், மேலதிக மாவட்ட பதிவாளர் பிரிவு உத்தியோகத்தர்கள் போன்றவர்களின் பங்களிப்புடனும் கல்முனை பிரதேச எல்லைக்குட்பட்ட கிராம அபிவிருத்தி சங்கங்களின் நிதி உதவியுடனும் இந்த உணவுப் பொருட்கள் சேகரித்து வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அங்கர், அரிசி, கருவாடு, சவர்க்கார வகைகள் போன்ற பொருட்கள் கிளை தலைவர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாகவும் பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டு பிரதேச செயலாளரினால் அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
.(எஸ்.அஷ்ரப்கான்)
0 comments:
Post a Comment