வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த  மக்களை
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று சந்தித்தார்.

வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல, கொலன்னாவை பிரதேச மக்கள் பற்றி கண்டறிவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று 22 ஆம் திகதி  பகல் இப்பிரதேசங்களில் மேற்பார்வை விஜயத்தை மேற்கொண்டார்.
முதலில் வெல்லம்பிட்டி பிரதேசத்திற்குச் சென்ற ஜனாதிபதி அங்கு மக்கள் தங்கியுள்ள வெல்லம்பிட்டி வித்தியாவர்தன வித்தியாலத்திற்குச் சென்று மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள்பற்றி கேட்டறிந்தார்.
மக்கள் மத்தியில் சென்று தனிப்பட்ட ரீதியில் ஒவ்வாருவரிடமும் விபரங்களை கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை பரீட்சித்துப் பார்த்ததுடன் அவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் நிலவும் குறைபாடுகள்பற்றி விசாரித்தார்.
தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் பற்றி இதன்போது மக்கள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தார்கள்.
துரிதமாக இந்நிலைமைகள்பற்றி கண்டறியுமாறு உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிவாரணப் பணிகளை ஒழுங்காகவும் முறையாகவும் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்புடைய பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி, மீதொட்டமுல்ல தர்மோதய விகாரையில் தங்கியுள்ள மக்களை சந்திப்பதற்காக புறப்பட்டார்.
அவர்களிடமும் நலன்விசாரித்த ஜனாதிபதி, அதன் பின்னர் கொலன்னாவ நாகவனாராம விகாரைக்குச் சென்று அங்கு தங்கியுள்ள மக்களைச் சந்தித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ள முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு அரசு பாடுபடுவதாக இம்மக்களை சந்தித்த ஜனாதிபதி குறிப்பிட்டார்







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top