முன்னாள் அமைச்சர் மன்சூரின் சேவையைப் பாராட்டி


மெல்பேர்னில் கெளரவிப்பு


முன்னாள் பிரதி அமைச்சர் எஸ்.  .நிஜாமுதீனும் கலந்து கொண்டார்

முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை  அமைச்சர் அப்துல் ரஸ்ஸாக் மன்சூர் அவர்கள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சராகவும் பஹ்ரெய்ன் மற்றும் குவைத்துக்கான இலங்கைத் தூதுவராக பணியாற்றிய காலத்திலும் அவர் இலங்கைக்கு ஆற்றிய சேவைகளுக்காக அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில்கெளரவிக்கப்பட்டார் அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கை முஸ்லிம் சமூகத்தினரால் இக் கெளரவிப்பு வழங்கப்பட்டது.

முன்னாள்  அமைச்சர் ஏ.ஆர். மன்சூருக்கு கடந்த மார்ச் மாதம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கெளரவ கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இடம்பெற்ற கெளரவிப்பு வைபவத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் எஸ்.  .நிஜாமுதீன் அவர்களும் கலந்து கொன்டார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top