வெல்லம்பிட்டி பிரதேசத்தின்
தற்போதய நிலவரம்
ஒரு
நேரடி (REPORT) அறிக்கை
வெல்லம்பிட்டி
பிரதேசத்திற்கு நாம் இன்று 23 ஆம் திகதி காலை நேரடியாகச் சென்ற
போது.............
வெல்லம்பிட்டி
பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
வீடுகளை பார்வையிடுவதற்குவீட்டுச்சொந்தக்காரர்கள்தற்போது அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சில இடங்களில் இன்னமும் வெள்ள நீரானது வடிந்தோடாது தேங்கியுள்ளதை அவதாணிக்க முடிந்தது.
இவ்வாறு தேங்கியுள்ள வெள்ள நீர் காரணமாக பல்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு அங்குள்ள மக்கள் முகங்கொடுக்கும் துர்ப்பாக்கிய நிலையினை எதிர்கொண்டுள்ளார்கள்.
நீர் வடிந்தோடும் பாலங்களில் உள்ள தடைகாரணமாகவே சில இடங்களில் நீர் வடிந்தோட முடியாது தேங்கியுள்ளது.
இதனால் நீர் வடிந்தோட முடியாத பாலங்களை சீர்திருத்தும் நடவடிக்கையில் தேசிய வடிகால் அமைச்சின் ஊழியர்கள் துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள்.
பிரதான வீதியில் போக்கு வரத்து இடம்பெற்றுக்
கொண்டிருக்கிறது.பிரதான பாதையைத் தவிர உள் பாதைகளில் இன்னும் வெள்ள நீர்
வீடுகளிலும் பாதையிலும் நிறைந்து காணப்படுகின்றது.
அங்கு பாதைகளிலும் வீடுகளிலும் நிறைந்து காணப்படும்
நீர் அசுத்தமானதாகவும் மனிதர்களுக்கு எளிதாக நோய்களை பரப்பும் நிலையிலும்
காணப்படுகின்றது. இந்த அசுத்தமான தண்ணீருக்குள் நடத்து சென்றால் கால்களில் கடி
ஏற்படுவதுடன் சொறிச்சலும் இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.
உடனடியாக இப்பிரதேசங்களில் நோய் தடுப்பு மருந்துகளை தெளிக்க வேண்டும் என மக்கள்
வேண்டுகோள் விடுக்கின்றனர்.
குப்பைகள்
தேங்கியுள்ள இடங்களில் நுளம்புகள், ஈக்கள் பரவுகின்ற அபாயநிலையும் காணப்படுகின்றது.
குறுக்குப் பாதைகளில் இன்னும் நீர் நிறைந்து காணப்படுவதால்
வீட்டுச் சொந்தக்காரர்கள் தமது வீட்டுக்குப்
போய் பார்ப்பதற்கு முடியாமல் பிரதான வீதியில் நின்று கொண்டிருப்பதைக்
காணக்கூடியதாக இருந்தது.
இந்நிலைமையையும் சந்தர்ப்பத்தையும் பாவித்து தோணி
சொந்தக்காரர்கள் பாதையால் வீட்டுக்கு பெண்களை அழைத்துச் சென்று விடுவதற்கு பணம்
அறவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆண்கள் தமது வீடுகளைச் சுத்தம் செய்வதற்கு அதற்குத்
தேவையான பொருட்களை எடுத்துச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. (வீடுகளைச் சுத்தம் செய்வதற்குத் தேவையான
பொருட்களை பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் தேவைப்படுவதால் நிவாரணப் பொருட்களை வழங்குபவர்கள்
இப்பொருட்களை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.)
பிரதான வீதியிலும் நீரில் மூழ்கிய கடைகள் உரிமையாளர்களால் சுத்தமாக்கப்படுகின்றன.
வெல்லம்பிட்டியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில்
உள்ள வாகனங்கள், ஆடைகள், மின் உபகரணங்கள், தளபாடங்கள் முற்றாக சீரழிந்துள்ளன என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றார்கள்
அந்த மக்கள் தாம் வாழ்வாதாரத்தை முற்றாக இழந்து விட்ட நிலையில் மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே வாழ்வினை தொடங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக கவலை வெளியிடுகின்றனர்.
அந்த மக்கள் தாம் வாழ்வாதாரத்தை முற்றாக இழந்து விட்ட நிலையில் மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே வாழ்வினை தொடங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக கவலை வெளியிடுகின்றனர்.
0 comments:
Post a Comment