தமிழக முதல்வராக 6வது முறையாக
ஜெயலலிதா
பதவியேற்பு
தமிழக
முதல்வராக 6வது முறையாக பதவியேற்கும் ஜெயலலிதா,
ஆளுநர் ரோசய்யா
முன்னிலையில் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
அதனைத்
தொடர்ந்து ஆளுநர்
ரோசய்யா வாசிக்க
அதனை பின்தொடர்ந்து
ரகசியக்காப்புப் பிரமாணமும் எடுத்துக் கொண்டார் ஜெயலலிதா.
சென்னை
பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற
பதவியேற்பு விழாவில், ஆளுநர் ரோசய்யா பதவிப்
பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து
வைத்தார்.
அதனைத்
தொடர்ந்து முதல்வராக
பதவியேற்றுக் கொண்டதற்கான ஆவணத்தில் முதல்வர் ஜெயலலிதா
பச்சை நிறப்
பேனாவால் கையெழுத்திட்டார்.
அதில் ஆளுநர்
ரோசய்யாவும் கையெழுத்திட்டார்.
முதல்வர் ஜெயலலிதாவைத்
தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி,
திண்டுக்கல் ஸ்ரீநிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, சி.வி.சண்முகம்,
கே.பி.அன்பழகன், பி.சரோஜா, கே.சி.கருப்பண்ணன்,
எம்.சி.சம்பத், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன்,
டி.ஜெயக்குமார்
ஆகிய 14 பேரும்
கூட்டாக அமைச்சர்களாக
பதவிப் பிரமாணமும்,
ரகசிய காப்புப்
பிரமாணமும் செய்து கொண்டனர்.
0 comments:
Post a Comment