வெல்லம்பிட்டி பிரதேசத்தின் தற்போதய நிலவரம்
ஒரு நேரடி (REPORT) அறிக்கை
வெல்லம்பிட்டி பிரதேசத்திற்கு
குறிப்பாக கிராம
சேவகர் வீதியில்
நாம் இன்று
24 ஆம் திகதி
செவ்வாய்கிழமை பிற்பகல்
நேரடியாகச் சென்ற
போது.............
சில
குறுக்குப் பாதைகளில் இன்னும் நீர் நிறைந்து
காணப்படுகின்றது. சில இடங்களில்
இன்னமும் வெள்ள
நீரானது 2 அடி -3 அடி வரை வடிந்தோடாது தேங்கியுள்ளதை
அவதாணிக்க முடிந்தது.
இவ்வாறு
தேங்கியுள்ள வெள்ள நீர் காரணமாக பல்வேறு
சுகாதார பிரச்சினைகளுக்கு
அங்குள்ள மக்கள்
முகங்கொடுக்கும் துர்ப்பாக்கிய நிலையினை எதிர்கொண்டுள்ளார்கள்.
அங்கு
பாதைகளிலும் வீடுகளிலும் நிறைந்து காணப்படும் நீர்
அசுத்தமானதாகவும் மனிதர்களுக்கு எளிதாக நோய்களை பரப்பும்
நிலையிலும் காணப்படுகின்றது. இந்த அசுத்தமான தண்ணீருக்குள்
நடத்து சென்றால்
கால்களில் கடி
ஏற்படுவதுடன் சொறிச்சலும் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். குப்பைகள்
தேங்கியுள்ள இடங்களில் நுளம்புகள், ஈக்கள் பரவுகின்ற
அபாயநிலையும் காணப்படுகின்றது.
வெள்ளம் கூடுதலாக இருந்த சமையத்தில் இங்குள்ள வீடுகளில் 10 அடிக்கு மேல் தண்ணிர்
நிறைந்திருந்ததை அங்கிருக்கும் அடையாளங்கள் காட்டுகின்றன. லொறிகள், வேன்கள்,
கார்கள்,ஆட்டோக்கள் முற்றாக நீரில் மூழ்கிப் போய் இருந்திருப்பதை தடையங்களை வைத்து
காணக்கூடியதாக இருந்தது.
இப்பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து இன்றுவரை பலர்
வீட்டின் மேல் மாடிகளில் இருந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு இதுவரை எந்த
அமைப்பினரும் சமைத்த உணவுகளையோ, உலர்
உணவுகளையோ எடுத்துச் சென்று வழங்கவில்லை
என அங்கிருப்பவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
இதுமாத்திரமல்லாமல் சமைக்க முடியாத நிலையில் சீரழிந்துள்ள தமது வீடுகளை சுத்தம்
செய்து கொண்டிருப்பவர்களுக்கு கூட சமைத்த உணவுகளை வழங்குவதற்கு எந்த அமைப்பும்
முன் வரவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேசத்தில் மின்சாரம் வழங்கப்படவில்லை
இப்பிரதேசத்தில் மின்சாரம் வழங்கப்படவில்லை
வெல்லம்பிட்டியில்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில்
உள்ள வாகனங்கள்,
ஆடைகள், மின்
உபகரணங்கள், தளபாடங்கள் முற்றாக சீரழிந்துள்ளன அந்த
மக்கள் தாம்
வாழ்வாதாரத்தை முற்றாக இழந்து விட்ட நிலையில்
மீண்டும் ஆரம்பத்தில்
இருந்தே வாழ்வினை
தொடங்கும் அவல
நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக
கவலை வெளியிடுகின்றனர்.
0 comments:
Post a Comment