FASPEC அமைப்பின்
தேன் மழை சிறப்பு நிகழ்ச்சி

 (எம்.எஸ்.எம்.சாஹிர்)

சம்மாந்துறை சமூக கலாசார கல்வி மற்றும் சமாதான  நண்பர்கள் அமைப்பின் (FASPEC) 5ஆவது வருடப்பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்பட்ட தேன் மழை சிறப்பு நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது.
பஸ்பெக் அமைப்பின் பொதுச் செயலாளரும், நவமணி ஆசிரியர் பீட உறுப்பினருமான கியாஸ் . புஹாரி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக் கழக மொழித் துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அப்துல்லா கலந்து சிறப்பித்தார். விஷேடகௌரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ்ஷெய்க் எம்..எம்.அமீர், கிழக்கு மாகாண பாலர் பாடசாலைகள்  கல்விப் பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம், சமாதானக் கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் எஸ்.எல்.றியாஸ், சம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.. சபூர்த்தம்பி, சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி, சட்டத்தரணி யு.எல்.எம். சமீம், பாலர் பாடசாலை வெளிக்கள உத்தியோகத்தர் எஸ்.எம். றிஸான், கல்முனை சிங்கர் பிளஸ் முகாமையாளர் ஆர். அபா முஹம்மட் ஆகியோருடன் பலர் கலந்து கொண்டனர்.
இங்கு சிறப்பாக இயங்கிய முன்பள்ளிகளுக்குவித்ய ஒளிவிருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மேலும் மாவட்ட ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட இளைஞர் கழக இளம் பாடகர் கௌரவிப்பு மற்றும் அபிநயப் போட்டிகளில் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கௌரவிப்பு மற்றும் சம்மாந்துறையில் சிறப்பாக இயங்குகின்ற முபோ இளைஞர் கழகம், விண்ணர்ஸ் இளைஞர் கழகம் ஆகியனவும் கௌரவிக்கப்பட்டன.
இந் நிகழ்வுக்கு யு.எஸ்.என். டிரவல்ஸ், நுஹா சூ மார்ட், எப்.ஆர்.எஸ். டெக்ஸ், அரோமாஸ், லீன் சனலிங், மிலேனியம் கொமினிகேஷன், கொலிஜ் ஒப் ப்ரபெஷனல், அம்மார் பிரிண்டர்ஸ், Achiever, இமேஜ்கேட், நவமணி பத்திரிகை மற்றும் தமிழன் 24 சஞ்சிகை ஆகியன அனுசரணை வழங்கியிருந்தன
மேலும் சமாதன கற்கைகளுக்கான நிலையத்தினால் வழங்கப்படுகின்ற சமாதானத் தூதுவர் விருது பிரதம அதிதி பேராசிரியர் றமீஸ் அப்துல்லாவுக்கும், அதிதிகளில் ஒருவராக கலந்துகொண்ட சோலைக்கிளி அத்தீக்கிற்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
விழாவின்போது எடுக்கப்பட்ட படங்கள் சில...









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top