சாய்ந்தமருதில் 16 கோடி 20 இலட்சம் ரூபா செலவில் அணைக்கட்டு!
அமைச்சரவை அனுமதி!!
சாய்ந்தமருது
பிரதேச செயலாளர்
பிரிவிற்குட்பட்ட களப்பினை சூழ அணைக்கட்டு அமைக்கப்படவிருக்கிறது. இத்திட்டத்திற்கென 16 கோடி 20 இலட்சம் ரூபாவை செலவிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை
முடிவுகளை அறிவிக்கும்
ஊடகவியலாளர் சந்திப்பிலே மேற்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
நகரத்
திட்டமிடல் மற்றும் நீர்வழங்கள் அமைச்சரும் முஸ்லிம்
காங்கிரஸ் தலைவருமான
ரவூப் ஹக்கீமினால்
முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை இந்த அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
162 மில்லியன் ரூபா செலவில் சாய்ந்தமருதில் உள்ள களப்பினை சுற்றி
அணைக்கட்டு அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு
மற்றும் சூழல்
பாதிப்புகளினால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை
கவனத்திற்கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
களப்பில் ஏற்படும்
வெள்ளப்பெருக்கினால் 2 700 குடும்பங்களில் 10 000 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Control of
floods and environmental pollution in Sainthamaruthu Divisional Secretary's
Division in Kalmunai
Residents in
Sainthamaruthu Divisional Secretary's Division in Ampara District are affected
by the floods in the lagoon annually. Absence of proper drains, some aquatic
plants obstructing the flow of water, and waste disposal around the lagoon by
residents have caused this situation. Accordingly, the proposal made by City
Planning and Water Supply Minister Rauff Hakeem to construct a barrier around
the lagoon at an estimated cost of Rs. 162 million as a measure to these issues
benefiting more than 10,000 people of 2,700 families, was approved by the
Cabinet of Ministers.
0 comments:
Post a Comment