தாய்லாந்தை 70 ஆண்டுகளாக ஆண்ட மன்னர்
பூமிபொல் அட்டுலியடேஜ் 88ஆவது வயதில் காலமானார்
தாய்லாந்தின் மன்னர் பூமிபொல் அட்டுலியடேஜ்,(Thailand's King Bhumibol Adulyade) தனது 88ஆவது வயதில், இன்று 13 ஆம் திகதி வியாழக்கிழமை காலமானார் என, தாய்லாந்து அரச மாளிகை அறிவித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாகவே நோய்வாய்ப்பட்டிருந்த மன்னர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, அரச மாளிகையின் அறிவிப்புத் தெரிவித்துள்ளது.
உலகில் அதிக காலம் அரச பொறுப்பில் காணப்பட்டவர் என்ற பெருமையைக் கொண்ட மன்னர், தனது சகோதரர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தனது 18ஆவது வயதில், மன்னராகப் பொறுப்பேற்றார்.
மன்னர் பூமிபொலின் 64 வயதான மகன், மகா வஜிரலோங்கொன், புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment