காவியத்தலைவன் A.P.J.அப்துல் கலாம்
அன்னாரின் பிறந்த நாள் இன்று.
இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் கடைகோடியில் உள்ள ராமேஸ்வரத்தில்
சாதரணமான
ஏழை மீனவக் குடும்பத்தில் ஜெயினுலாப்தின் - ஆஷியம்மா தம்பதியருக்கு
15.10.1931 ல் பிறந்தவர் தான் A.P.J.அப்துல் கலாம்.
A.P.J.அப்துல்
கலாமின் 86-வது பிறந்த தினம்
இந்நாள். அவரின்
முழுப் பெயரோ
"ஆவுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் அப்துல்
கலாம்" சிறு வயது முதலே
பல
கஸ்டங்களை கடந்து வந்தவர் தான் கலாம்.நாளிதழ்களைப் போடும் பையனாக
இருந்து தன்
வாழ்க்கைப் பயணங்களை தொடங்கியுள்ளார்.
இராமநாதபுரம்
ஸ்வாட்ஸ் மெட்ரிக்
பள்ளியில் படித்தார்.பின் தன்னுடைய
கல்லூரி வாழ்க்கையை
திருச்சி செயிண்ட்
ஜோசப் கல்லூரியில்
பி.எஸ்.சி. இயற்பியலும்
,1955ஆம் ஆண்டில் சென்னை எம்.ஐ.டி யில்
ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங்கும் பயின்றார்.
இப்படி
தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய
கலாம் இந்தியாவின்
முதல் குடிமகனாக
உயர்ந்தார்.1958-ல் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி
நிறுவனத்தில் சேர்ந்த கலாம் 1963-ல் இந்திய
விண்வெளித் துறையின் திட்ட அலுவலர் ஆனார்.
1998ல் ராஜஸ்தானில்
அணுகுண்டு சோதனை
நடத்தி உலக
நாடுகளை எல்லாம்
அதிர வைத்தார்.
1960-ல் DRDO விஞ்ஞானியாக தன் பயணத்தை
தொடங்கிய கலாம்
பிறகு இஸ்ரோ
விண்வெளித் துறையில் கால்பதித்து பல ஏவுகணைகளை
பறக்க விட்டார்.உலக நாடுகள்
மத்தியில் இந்தியா
தலைநிமிர இவரின்
பணி இன்றியமையாதது. இந்திய
விண்வெளித் துறைக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கினார். அக்னி
ஏவுகணையை விண்ணில்
செலுத்தி உலக
நாடுகள் அனைத்தையும் இந்தியாவை
திரும்பிப் பார்க்க வைத்த இவர் "ஏவுகணை
தந்தை என்றே"
அழைக்கப் பட்டார்
.பல தொழில்
நுட்பத்துக்கு வித்திட்டவராய் திகழ்ந்தவர்
A.P.J.அப்துல் கலாம்.
இந்திய
விண்வெளித் துறையோடு தன் பயணத்தை முடிக்காமல்
எதிர்கால இந்தியாவின்
மன்னர்களாம் இளைஞர்களை "கனவு காணுங்கள்
கனவு காணுங்கள்" எனக் கூறி ஒவ்வொரு
இந்திய இளைஞரின்
மனதிலும் நம்பிக்கை
விதையை விதைத்தவர்.
ஒவ்வொரு இந்தியனின்
இதயத்திலும் வாழும் இமயமாக இருக்கிறார்.
பாரத
ரத்னா, பத்ம
பூசண், பத்ம
விபூசண் என
எந்த பட்டத்தையும்
விட்டுவைக்காத கலாம் நாட்டின் குடியரசு தலைவராகவும்
உயர்ந்தார். இந்தியாவின்
11-வது குடியரசுத்
தலைவராக 2002-2006 வரை பணியாற்றினார்
. எத்தனையோ பேரை இப்பதவி அலங்கரித்தது ஆனால்
இந்த பதவியே
அலங்கரிக்கப்பட்டது அப்துல் கலாமால்.நாட்டின் தலைவராக
உயர்ந்த போதிலும்
தனக்கென எதுவும்
சேர்த்து வைக்காமல்
நாட்டுக்காகவே வாழ்ந்தார். அவர் சேர்த்து வைத்தது
என்னவோ அவரின்
புத்தகங்களும், மக்களின் அன்பையும்தான்.
இந்தியா
வல்லரசு நாடாக
வேண்டும் என்பதே
கலாமின் ஆசையாக
இருந்தது அதனால்
"இந்தியா 2020" என்ற நூலை
எழுதினார். அவரின் வாழ்க்கை காவியமான "அக்னி
சிறகுகள்",குறிக்கோள் 3 பில்லியன்,திருப்பு முனைகள்,
பற்றவைக்கப்பட்ட மனங்கள் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.
கனவு
காணுங்கள் எனக்கூறி
கலங்கரை விளக்காய்
திகழ்ந்த கலாம்..27.07.2015
அன்று மேகாலயா
மாநிலத்தின் தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மைக்
கல்வி நிறுவனத்தின்
நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்த A.P.J.அப்துல் கலாம் திடீரென மயங்கி
விழுந்து மாரடைப்பால்
இறந்தார்.அவரின்
மரணம் இந்தியாவையே
சோகத்தில் மூழ்க்கியது
ஒவ்வொரு இந்தியனும்
தன் குடும்பத்தில்
ஒருவராக கலாமுக்காக
துக்கம் செய்தார்கள்.அவரின் சொந்த
ஊரான ராமேஸ்வரம் பேக்கரும்பில் அவரின்
உடல் அடக்கம்
செய்யப்பட்டது.தற்போது அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்தில் பிரமாண்டமான வளாகம்
கட்டப்பட்டு வருகிறது. இன்று கலாம் நம்மிடம்
இல்லை என்றாலும்
அவர் விதைத்த
விதைகளாய் இளைஞர்கள்
இருக்கின்றார்கள்.
கலாமின் முக்கிய கோரிக்கைகள்
1.கிராமம்
- நகரம் இடையே
இடைவெளி அனைத்தும்
அகலப் பட
வேண்டும்.
2.குடிநீர்,எரிசக்தி சமனடையப்
பட வேண்டும்.
3.விவசாயம்,தொழில் ,சேவை,
ஒருங்கிணைந்த முன்னேற்றம்.
4.சமூகம்
,பொருளாதாரம், பண்பாட்டுடன் சிறந்த கல்வி அனைவருக்கும்
கிடைத்தல்.
5.விஞ்ஞானம்
,அறிவார்ந்த வல்லமை ,தொழில் முதலீடு ஏற்புடைய
நாடாக மாற்ற
வேண்டும்.
6.குடிமக்கள்
அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி.
7.ஊழலற்ற
,வெளிப்படையான, பொறுப்பான ஆட்சி முறை.
8.எவரும்
தனிமைப் படுத்தப்படாமல்
வறுமை ஒழிக்கப்பட்டு
கல்லாமை இன்றி,
பெண்கள், குழந்தைகள்
பேணப்படுதல் .
9.அனைத்து
வகைகளிலும், ஓர் ஏகோபித்த நாடாக இந்தியா
மாற வேண்டும்.
10.சிறந்த
தலைமை, வளமான,
அருமையான நிலையை
இந்திய மக்கள்
அனுபவிக்க வேண்டும்.
கலாம்
கற்பித்த பொன்
மொழிகள்
சிறந்த
மனிதர்களுக்கு மதம் என்பது,
நண்பர்களை
உருவாக்கும் வழி சிறிய மனிதர்களுக்கு அது
சண்டையிடுவதற்கான கருவி .
உங்களது
முதல் வெற்றிக்குப்
பிறகு ஓய்வு
எடுக்காதீர்கள். ஏனென்றால் இரண்டாவது முயற்சியில் தோல்வியடைந்தால்,
முதல் வெற்றி
அதிர்ஷ்டம் என்று சொல்ல நிறைய உதடுகள்
காத்துக் கொண்டிருக்கும்.
வானத்தைப்
பாருங்கள் நாம்
தனித்து இல்லை.இந்த பிரபஞ்சம்
முழுவதும் நம்மிடம்
நட்பாக உள்ளது.
கனவு
காண்பவர்களுக்கும் உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது.
பெரிய
விசயங்களுக்காக காத்திருக்க கூடாது.கையில் என்ன
இருக்கிறதோ அதைக்கொண்டு பயணத்தை தொடங்க வேண்டும்.
எல்லோரும்
5 நிமிடங்கள் ஒதுங்கி சிந்தியுங்கள், என்னிடமுள்ள தனித்திறமை
சிந்தனை, அறிவு,
மனோபாவம் என்ன
?
இவரை பற்றிய சில அரிய தகவல்கள்,
தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.
இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.
‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.
நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.
இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.
ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.
அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.
நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்.
அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.
ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.
அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.
அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.
அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.
1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் திகதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.
1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.
இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.
போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.
இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.
அப்துல் கலாம் தினமும் குர்ஆன் ஓதத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும். இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment