ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அப்துல்லாஹ்
ஹஸரத் அவர்களின் ஸனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அப்துல்லாஹ் ஹஸரத் அவர்களின் ஜனாஸா இன்று வியாழக்கிழமை(13.10.2016) மாலை காத்தான்குடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நேற்று 12 ஆம் திகதி புதன்கிழமை மாலை வபாத்தான காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபரும் இஸ்லாமிய சன்மார்க்க அறிஞருமான காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் அப்துல்லாஹ் றஹ்மானி ஹஸரத் அவர்களின் ஸனாஸா தொழுகை வியாழக்கிழமை மாலை காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆப்பள்ளிவாயலில் நடைபெற்றது.
தொழுகைக்கு முன்னதாக அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி றிஸ்வி முப்தி மற்றும் அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உட்பட உலமாக்கள் உரையாற்றினர்.
ஜனாஸா தொழுகையிலும் நல்லடக்கத்திலும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சர் றிசாட் பதியுதீன் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி றிஸ்வி முப்தி உட்பட நாட்டின் பல பாகங்களிலுமுள்ள அறபுக்கல்லூரிகளின் அதிபர்கள் உலமாக்கள் முக்கியஸ்தர்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பள்ளிவாயல் நிரம்பி பள்ளிவாயலின் வெளியே மற்றும் பள்ளிவாயல் வெளியே உள்ள வீதிகளிலும் பொது மக்கள் நின்று ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டனர்.
ஜனாஸா தொழுகையை அப்துல்லாஹ் ஹஸரத் அவர்களின் மகன் மௌலவி பறக்கத்துல்லாஹ் பலாஹி நடாத்த மௌலவி ஏ.ஜி.எம்.அமீன் பலாஹி துஆப்பிராத்தனையை நடாத்தினார்.
இதையடுத்து அப்துல்லாஹ் ஹஸரத் அவர்களின் ஜனாஸா பெருந்திரளான மக்கள் புடை சூழ காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் மைய்யவாடிக்கு கொண்டு செல்லப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
0 comments:
Post a Comment