'முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்னும் சிகிச்சை தேவை!

' அப்போலோ அறிக்கை

முதல்வர் கடந்த மாதம் 22-ம் திகதியில் இருந்து க்ரீம்ஸ் ரோட்டில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக ஆளுநர், முதல்வர் உடல்நிலை குறித்து, அப்போலோ மருத்துவமனைக்கே நேற்று மாலை சென்று, மருத்துவர்களிடம் விசாரித்தார்.

லண்டன் மருத்துவர் ரிச்சர்டு முதல்வருக்கு சிகிச்சை அளிப்பதாக முன்னரே செய்திகள் வெளிவந்தன.
தற்போது, அதனை உறுதி செய்யும் வகையில், செய்தி வெளியிட்டு இருக்கிறது அப்போலோ.

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து தேறிவருகிறது. எக்ஸ்பெர்ட் ஒப்பீனியனிற்காக லண்டன் Guy's and St.Thomas மருத்துவமனையில் இருந்து சர்வதேச மருத்துவரான ரிச்சர்டு பீலேவிடம் ஆலோசணைகள் கேட்கப்பட்டது. அவர் கடந்த 30-ம் திகதி முதல் முதல்வரின் உடல்நிலையை பார்வையிட்டு வருகிறார். ரிச்சர்டு எல்லா மருத்துவ அறிக்கைகளையும் ஆராய்ந்து முதல்வரை கவனித்துக்கொள்ளும் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினார்.


முதல்வரின் தொற்று குணமாக அதற்கேற்ற மருந்துகளை ரிச்சர்டு மற்றும் சிறந்த மருத்துவர்களை வைத்து ஆலோசனை செய்து சிகிச்சை அளித்து வருகிறோம்.அவருக்கு அளிக்கப்படும் மருந்துகளுக்கு முதல்வரின் உடல் சிறப்பாக ஒத்துழைக்கிறது. இன்னும் சில நாட்களுக்கு முதல்வர் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top