இலங்கையின் மிகப்பெரும் இஸ்லாமிய அறிஞர்
ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் ஆலிம் மறைவு
இலங்கையின் மிகப் பெரும் இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் ஆலிம் நேற்று மாலை காலமானார்.
பெரிய ஹஸ்ரத் என காத்தான்குடி மக்களால் அன்போடு அழைக்கப்படுகின்ற ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் ஆலிம் தென் இந்தியாவின் காயல் மாநகரம் அருகே அமைந்திருக்கும் அதிராம் பட்டிணத்தில் பிறந்தாலும் அவர்களது வாழ்வின் பெரும் பகுதியை காத்தான்குடியில் கழித்துள்ளார்.
காத்தான்குடி மண்ணில் பல்துறை சார் அறிஞர்களை உருவாக்குவதில் முன்மாதிரி மிக்க பங்களிப்பொன்றை வழங்கியிருந்தார்..
பிறந்த மண், குடும்பம், உறவுகள் அனைத்தையும் துறந்து இந்த மண்ணுக்காகவும், இந்த மண்ணின் முன்னேற்றத்திற்காகவுமே வாழ்ந்திருக்கிறார்கள்.
காத்தான்குடி மக்கள் மனங்களில் இன நல்லுறவுச் சிந்தனைகளை வளர்த்தெடுப்பதில் அயராது பாடுபட்டுள்ளார்கள்.
குறிப்பாக காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைச் சம்பவங்களின் பின்னரும் தமிழ்-முஸ்லிம் இனநல்லுறவை கட்டியெழுப்புவதில் ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் ஆலிம் முன்னின்று செயற்பட்டிருந்தார்
.
இன்று காலை பத்து மணியளவில் காத்தான்குடியில் நடைபெறவுள்ள ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் ஆலிம் அவர்களின் நல்லடக்கத்தில் கலந்து கொள்வதற்காக முக்கிய அரசியல்வாதிகள், அமைச்சர்கள் மாத்திரமன்றி, தமிழ்ச் சமூகத்தின் முக்கிய செயற்பாட்டாளர்கள் , பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது காத்தான்குடிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
புதன்கிழமை மாலை வபாத்தான காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் சங்கைக்குரிய அப்துல்லாஹ் றஹ்மானி ஹஸரத் அவர்களின் ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்கம் வியாழக்கிழமை (13.10.2016) பிற்பகள் 4.30 மணிக்கு இடம் பெறவுள்ளது
புதன்கிழமை மாலை வபாத்தான காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் சங்கைக்குரிய அப்துல்லாஹ் றஹ்மானி ஹஸரத் அவர்களின் ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்கம் வியாழக்கிழமை (13.10.2016) பிற்பகள் 4.30 மணிக்கு இடம் பெறவுள்ளது
மௌலானா மௌலவி 'ஷைகுல் பலாஹ்'
எம்.ஏ. அப்துல்லாஹ் ரஹ்மானி அவர்களின் சுருக்க வரலாறு!!!
காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அதிபர்
மௌலானா மௌலவி 'ஷைகுல் பலாஹ்'
எம்.ஏ. அப்துல்லாஹ்
ரஹ்மானி அவர்கள் தென்னிந்தியா தஞ்சை
மாவட்டம் அதிராம் பட்டினத்தில் 21.03.1932 இல் பிறந்தார்கள்.
இவர்களின் தந்தை அல்லாமா அல்ஹாஜ் முகம்மது அபூபக்கர்
ஆலிம் ஆவார்கள். இப்பெரியார்
1950 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம்
ஆண்டு வரை மஹரகம மத்ரஸதுல் கபூரிய்யா
அரபுக் கல்லூரியில்
விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ளார்கள்.
1955 ஆம் ஆண்டு
முதல் 1965 ஆம் ஆண்டு வரை
அட்டாளைச்சேனை
ஷர்க்கியா அரபுக் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றி பின்னர்
இந்தியாவில் கீழ்க்கரை காயல்பட்டினம் போன்ற இடங்களில் கல்விப் பணியாற்றினார்கள்.
தந்தை
அபூபக்கர் ஆலிம் ஷாஹிப்
போன்று தனயனான
மௌலானா மௌலவி அப்துல்லாஹ்
ஹஸ்ரத் அவர்களும் ஆலிமாக வெளிவருவதற்காக சொந்த ஊர்
அதிராம்பட்டினத்தில் மத்ரஸதுல் ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியில் சேர்ந்து
மார்க்க கல்வி கற்று 01.04.1954 ஆம்
ஆண்டு ரஹ்மானி பட்டத்துடன் மத்ரஸா வாழ்க்கையை
முடித்து வெளியேறினார்கள்.
ஆசிரியராக
அதிராம் பட்டினம் அல்
மத்ரஸதுல் ஸலாஹிய்யாவில் அதிபராகப் பதவி
ஏற்று நான்கு ஆண்டுகள்
நடத்தினார்கள். அதன்
பின்னர் தனது தந்தையுடன் அப்துல்லாஹ்
ஹஸ்ரத் அவர்கள் 03.05.1958 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்து அட்டாளைச்சேனை
அரபுக் கல்லூரியில்
விரிவுரையாளராகக் கடமையாற்றினார்.
பின்னர்
05.01.1955ல்இல் ஆரம்பிக்கப்பட்ட காத்தான்குடி மத்ரஸதுல் பலாஹ் அரபுக்
கல்லூரிக்கு தகுந்த
விரிவுரையாளர்
தேவைப்பட்டதால் மௌலானா
மௌலவி அல்ஹாஜ் எம்.ஏ.
முஹம்மது அப்துல்லாஹ்
(ரஹ்மானி) அவர்கள் 13.10.1959 ஆம்
ஆண்டு உப அதிபராக காத்தான்குடி மத்ரஸதுல் பலாஹ்வில் கடமையைத் தொடர்ந்தார்கள்.
இவர்களது அயராத முயற்சியினால் காத்தான்குடியின் கண்ணாக மத்ரஸதுல் பலாஹ் இலங்கை
முழுவதும் ஒளி வீசத்தொடங்கியது.
இலங்கையில் முதலாவது அல்குர்ஆன்
மனன 'ஹிப்ழ்' வகுப்பு மத்ரஸதுல் பலாஹ்வில்தான் முதலாவதாக 18.12.1971 இல் ஆரம்பித்து
வைக்கப்பட்டது.
இந்த வகுப்பை தென் இந்தியா காயல் பட்டினத்தைச் சேர்ந்த
மர்ஹூம் மௌலானா மௌலவி அல்
ஹாபிழ் ரீ.எம்.கே.
செய்யித் அஹ்மத் (முத்து வாப்பா)
ஆலிம் அவர்கள் ஆரம்பித்து
வைத்தார்கள்.
இந்த
'ஹிப்ழ்' பணிக்காக அதிபர்
அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் சம்மாந்துறையைச்
சேர்ந்த மௌலவி ஹாபிழ் ஏ.
ஹஜ்ஜி முஹம்மத் அவர்களை நியமித்தார்கள்.
இவர்களின் அயராத
முயற்சியின் காரணமாக 1975 ஆம் ஆண்டு அல்குர்
ஆனின் 6666 வசனங்களையும் மனனம் செய்த
முதலாவது ஹாபிழ்கள்
குழு பட்டம் பெற்று வெளியேறினார்கள்.
இலங்கை
அரசாங்கத்தின் கல்வி
அமைச்சினால் 17.11.1959 இல் இம் மத்ரஸா பதியப்பட்டு 1983 ஆம் ஆண்டு இக்
கல்லூரி மத்ரஸதுல் பலாஹ் என்ற
பெயரை மாற்றி 'ஜாமிஅதுல்
பலாஹ்' எனும் பெயரில் உயர்கலாபீடமாக மாற்றப்பட்டது.
அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் அதிராம்
பட்டினம் செ.மு.க.நூறு முஹம்மது மரைக்காயர்
அவர்களின் புதல்வி உம்முல்
பஜ்ரியா அவர்களை
02. 09. 1961 ஆம் ஆண்டு மணமுடித்தார்கள்.
இந்த
இனிய வாழ்வில் மூன்று ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள்.
முறையே மூத்த புதல்வர் முஹம்மது ரஹ்மதுல்லாஹ். முஹம்மது முஸ்தபா மூன்றாம் மகன்
முஹம்மது பறக்கத்துல்லாஹ் ஆவார்கள்.தனது மூத்த புதல்வர்
முஹம்மது ரஹ்மதுல்லாஹ்வையும்
இளைய புதல்வர் பறக்கத்துல்லாஹ்வையும் காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ்வில் கல்வி
பயில வழி செய்தார்கள்.
அதன் பிரதிபலிப்பாக1991
ஆம் ஆண்டு ரஹ்மதுல்லாஹ் மௌலவி பட்டம் பெற்றார்..
இரண்டாவது மகன்
முஸ்தபா மரணமடைந்துவிட்டார். மூன்றாவது
மகன் முஹம்மது பறக்கத்துல்லாஹ் கொழும்பு
பெரிய பள்ளிவாசலில் இயங்கும் 'ஜாமிஆ
மதீனத்துல் இல்ம்' கல்லூரியில் அல்ஹாபிழ் பட்டம் பெற்று
காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ்வில் மௌலவி
பட்டப் படிப்பைத் தொடர்ந்து இதே கல்லூரியில் போதனாசிரியராகக் கடமையாற்றுகின்றார்.
55 வருட
காலமாக பெற்ற தாயை
பிறந்த பொன்னாட்டை உற்றாரை உறவினரை சுற்றத்தாரை நண்பர்களை பிரிந்து கடல்
கடந்து வந்து கல்விப் பணியாற்றிய அன்னார்
சொந்த ஊரில் தங்கிவாழ்ந்த காலம் கொஞ்சம்தான்.
தலைநகர் கொழும்பு 2 ஆம்
குறுக்குத் தெரு சம்மாங்கோட்டார் 'ஜாமிஉல் அழ்பர்' பள்ளிவாயலைக்
கட்டுவதற்கு
நிலம்கொடுத்து அதனை
அழகாகக் கட்டி முடித்த பெருமை அப்துல்லாஹ் ஹஸ்ரத்தின் பாட்டனார் அப்துல் காதிர்
ஆலிம் ஸாஹிப் அவர்களையே சாரும்.இந்தப்
பரம்பரையினர்
இன்றுவரை இப்பள்ளியை நிருவகிப்பதும்
அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்களும்
இப்பள்ளியில் பிரதான நிருவாகியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது
வாழ்நாளை ஜாமிஅதுல்
பலாஹ்வின் சேவைக்காக அர்ப்பணித்த அற்புத மனிதரான ஹஸரத் அவர்களிடம் கல்வி
கற்று 2015 வரை 404 மௌலவிமார்களும்
387 ஹாபிழ்களும் வெளியேறியுள்ளனர்
வெளியேறிய அனைத்து
பலாஹிகளும் அவரிடமே கல்விகற்றவர்கள் என்பது
இங்கு குறிப்பிடத்தக்கது.
இத்தகைய மதிப்புள்ள மகான் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் இலங்கை
மண்ணில் ஆற்றிய பணிகளைச் சமுதாயம்
மறந்துவிட முடியாது.
0 comments:
Post a Comment