அக்கரைப்பற்று நுரைச்சோலை வீடமைப்புத்திட்டத்தை
மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை

ஜனாதிபதியின் உத்தரவு என மவாட்டச் செயலாளா் தெரிவிப்பு

எதிர்வரும் டிசம்பா் 31ஆம் திகதிக்கு முன்னா் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவூதி அரசினால் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகள், பாடசாலை, வைத்தியசாலை. பள்ளிவாசல் என்பன  மக்களிடம் கையளிக்கபபடும். இதற்கான உத்தரவை ஜனாதிபதி வழங்கியுள்ளார் என  அம்பாறை மவாட்டச் செயலாளா் துசித்த பீ. வணிகசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளா.
இது குறித்து அம்பாறை மாவாடடச் செயலாளா் மேலும்  தகவல் தருகையில்
அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவூதி அரசினால் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளையும் உடனடியாக பகிர்ந்தளிக்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
இவ் வீடமைப்புத்திட்டம் பற்றி கடந்த காலங்களில் தொலைக்காட்சி, மற்றும் சமுக வலைத்தளங்கள்பாராளுமன்ற உறுப்பிணா்களும் பாராளுமன்றத்திலும்  கேள்வி  எழுப்பியிருந்தனா்.  மற்றும்    அமைச்சா்கள், ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியிருந்தனா்.   அத்துடன்  தேசிய பத்திரிகையில் மட்டுமல்ல  றியாதில் வெளிவரும்   அரபு நியுஸ் பத்திரிகைகளிலும் இவ் வீடமைப்புத்திட்டம் பகிர்ந்தளிக்காமல் இருப்பதனை சுட்டிக்ககாட்டப்பட்டது.
அத்துடன்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் உத்தரவின்படி இவ் வீடமைப்புத்திட்டத்தினை உயா் நீதிமன்ற தீா்ப்பின் படி பகிர்ந்தளிக்கும் படி எனக்கு அறிவித்துள்ளார்..   அதற்கமைவாக  அம்பாறை மாவட்டத்தில் வாழும் மூன்று சமுகத்திடமும்  இவ் வீடுகள்  பகிர்ந்தளிக்கப்படும்.  அத்துடன் இவ் வீடமைப்புத்திட்டம் சம்பந்தாக கடந்த வாரம் சம்பந்தப்பட்ட    அதிகாரிகளுடன்  எனது தலைமையில் கலந்துரையாடப்பட்டது.  எதிர்வரும் டிசம்பா் 31ஆம் திகதிக்கு முன்னா்  இந்த  500 வீடுகளும்  , பாடசாலை. வைத்தியசாலை. பள்ளிவசாலகள்  மக்களிடம் கையளிக்கபபடும் என அரச அதிபா் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.












0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top