மகள் அவசர பிரிவில் சிகிச்சைப் பெற்ற போதிலும்

இந்தியாவின் வெற்றிக்காக விளையாடிய முஹம்மது ஷமி

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு முஹம்மது ஷமி முக்கிய பங்கு வகித்தார். தற்போது, அவரது மகள் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையிலும் அணியின் வெற்றிக்காக விளையாடியது அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 2-வது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த 30-ந் திகதி தொடங்கியது. 3-ந் திகதி மாலை 4-வது நாளுடன் ஆட்டம் முடிவடைந்தது. இந்தியா 178 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு முஹம்மது ஷமியின் பந்து வீச்சும் முக்கிய காரணமாக இருந்தது. தனது ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சு மூலம் இரண்டு இன்னிங்சில் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இந்திய அணி மற்றும் ரசிகர்கள் வெற்றியை கொண்டாடி வரும் நிலையில், முஹம்மது ஷமி தனது குழந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு .சி.யூ. வார்டில் சேர்க்கப்பட்டிருந்த நிலையிலும் அணியின் வெற்றிக்காக விளையாடியது தற்போது தெரியவந்துள்ளது.

முஹம்மது ஷமிக்கு கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந்திகதி திருமணம் முடிந்தது. கடந்த ஆண்டு ஜூலை 17-ந்திகதி முஹம்மது ஷமி- ஹசீன் ஜஹன் தம்பதிக்கு அயிரா என்ற பெண் குழந்தை பிறந்தது.

14 மாதமே ஆகும் முஹம்மது ஷமியின் குழந்தை அயிரா கடும் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவல் முஹம்மது ஷமிக்கு தெரியவந்ததும், போட்டி முடிந்த பின் மருத்துவமனைக்கு சென்று மகளை பார்த்துள்ளார்.

பின்னர் காலையில் மைதானத்திற்கு திரும்பி விளையாடியுள்ளார். இப்படி மருத்துவமனைக்குச் சென்று வந்து அணிக்காக விளையாடியுள்ளார். 3-ந் திகதி மாலை இந்தியா வெற்றி பெற்ற போது, அயிரா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகள் .சி.யூ. வார்டில் சேர்க்கப்பட்ட நிலையிலும் அணிக்காக விளையாடிய முஹம்மது ஷமியின் மனஉறுதி அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top