மருதமுனையைச் சேர்ந்த குடும்பப் பெண் மர்ம மரணம்!
வைத்தியசாலைக்கு அழைத்த வந்த நபர் தலைமறைவு!!
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் இருந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட பெண் ஒருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
அந்தப் பெண்ணை
களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் கொண்டுவந்து சேர்ப்பித்த ஆண் நபர் தலை
மறைவாகிவிட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த
சம்பவம் தொடர்பில் தலை மறைவாகியுள்ள
குறிப்பிட்ட இளைஞரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
நேற்று
மாலை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் காயங்களுடன்
அனுமதிக்கப்பட்டிருந்த
மருதமுனையைச் சேர்ந்த பானு (வயது 27) எனும் இரண்டு பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண்ணே உடல்நிலை
மிக மோசமடைந்ததன் காரணமாக நேற்று இரவு 7.20 மணியளவில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும் சிகிச்சைப் பலனின்றி அவர்
உயிரிழந்துள்ளார் என
அறிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணை
மருந்து, மாத்திரைகள் விற்பனை முகவரான மலையகத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே
களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் தனது காரில் கொண்டு வந்து சேர்த்துள்ளார்
என ஆரம்பக்கட்ட
விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது
தொடர்பில் குறித்த யுவதியின் சகோதரனால்
முறைப்பாடு ஒன்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த
நிலையில் குறித்த நபர் நேற்று
களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் குறித்த பெண்ணை அனுமதித்துவிட்டு
தான் பயணித்த காரை வைத்தியசாலை
வளாகத்தில் விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
இது
தொடர்பில் குறித்த நபரை தேடிவருவதாகவும்
குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில்
பிரேத பரிசோதனையின் பின்னரே தெரியவரும் எனவும்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment