கல்முனை புதிய கல்வி வலயம் தொடர்பாக
கிழக்கு மாகாண முதலமைச்சரிடம்
ஆத்திரத்தை வெளிக்காட்டிய பிரதியமைச்சா் ஹரீஸ்?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் கிழக்கு மாகாண முதலமைச்சா் ஹபீஸ் நஸீா் அகமட்டுக்குகல்முனை கல்வி வலயம் தொடர்பாக தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தி கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.
கிழக்கு மாகாண அமைச்சரவைக் கூட்டம் அண்மையில் முதலமைச்சா் நஸீா் அகமட் தலைமையில் கூடி கல்முனை கல்வி வலயத்தை இரண்டாக பிரித்து கல்முனை தமிழ் கல்வி வலயத்திற்கான அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்டது.
அம்பாரை மாவட்டத்தின் முஸ்லிம்களின் கேந்திர நிலையமான கல்முனை இரண்டாக பிரிக்கப்பட்டு தமிழர்களினதும் முஸ்லிம்களினதும்
ஒற்றுமை பிரிக்கப்படும் இந்நடவடிக்கையைக் கேள்வியுற்ற பிரதியமைச்சா் கடும் ஆத்திரப்பட்டதாக அறிய முடிகிறது.
கல்முனை பிரதேசத்தில் தனது கட்சியை சோ்ந்த பிரதியமைச்சா் அபிவிருத்தி குழு தலைவராக இருக்கும் சந்தா்ப்பத்தில் பிரதியமைச்சரோடு எதுவித கலந்துரையாடல்களும் செய்யாமல் தான் தோன்றித்தனமாக கல்முனை பிரதேசத்தை இரண்டாக துண்டாடியது வரலாற்றில் மறக்க முடியாத செயற்பாடு என பிரதியமைச்சா் தனது ஆதரவாளா்களோடுதெரிவித்து ஆத்திரப்பட்டார்
என்றும் கூறப்படுகின்றது.
மேலும் கல்முனை கல்வி வலயம் தொடா்பாக என்னோடு பேச அல்லது கலந்துரையாடுவதற்கு விருப்பம் இல்லையென்றால் கல்முனையைச் சோ்ந்த மாகாண சபை உறுப்பினா் கே.எம்.ஏ.ரஸ்ஸாக் ஜவாத்தோடு பேசியிருக்கலாம் ஜவாத்துக்கும் தெரியாமல் இத் தீா்மானத்தை முதலமைச்சரும் அவரோடு அமைச்சரவையிலிருந்த அட்டாளைச்சேனை சுகாதார அமைச்சா் நஸீரும் எடுத்துள்ளனா்.இது கல்முனைக்கு செய்யும் மாபெரும் துரோகமென மக்களும் நானும் கருதுகிறேன்என்று தெரிவித்து ஆத்திரப்பட்டதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
பிரதியமைச்சா் ஹரிஸ் கொழும்பிலிருந்து கல்முனை கல்வி வலயம் தொடா்பாக முதலமைச்சரோடு உரையாடுவதற்கு பல முறை முயன்ற போதும் முதலமைச்சரின் தொலைபேசி இயங்கவில்லையாம்.
உடனடியாக தலைவரோடு இது விடயமாக பேசியபிரதியமைச்சர் ஹரீஸ் முதலமைச்சரின் ரகசிய தொலைபேசி இலக்கத்தை பெற்றுள்ளார்.
பிரதியமைச்சா் ஹரீஸ் முதலமைச்சரின் இரகசிய இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பிதழை மேற் கொண்டதாகவும் தலைவா்தான் அழைக்கிறார் என்று எண்ணிய முதலமைச்சா் மறு கனமே தொலைபேசியை எடுத்து ஹலோ என்றதுதான் தாமதம் மறுமுனையில் இருந்த பிரதியமைச்சா் ஹரீஸ் பேசத் தொடங்கியதாகவும் கூறப்படுகின்றது.
கல்முனையின் பிரச்சினையை தீா்ப்பதற்கு நீங்கள் யார்? உங்களை அம்பாரை மாவட்ட மக்கள்தான் முதலமைச்சராக்கினோம். நீங்கள் தொடா்ந்தும் முதலமைச்சராக இருப்பதற்கு தமிழா்களின் ஆதரவு வேண்டுமென்பதற்காக எமது பிரதேசத்தை தாரை வார்த்து கொடுத்துள்ளீர்கள் இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.எத்தனை நாளைக்கு நீங்கள் முதலமைச்சராக இருக்கப் போறீா்கள் என்று பார்ப்போம். கல்முனையில் கைவைத்த யாரையும் மன்னிக்க முடியாது என ஆத்திரத்தைபிரதி அமைச்சர் ஹரீஸ் கொட்டித்தீர்த்ததாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment