தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க

எய்ம்ஸ் மருத்துவர்கள் வருகை


தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை குறித்து ஆலோசனை வழங்க எய்ம்ஸ் மருத்துவர் குழு சென்னை வர உள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த செப்., 22ம் திகதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நலம் தேறி வருவதாக அந்த மருத்துவமனை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வர் சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு சென்னை வர உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. முதல்வருக்கு சிகிச்சை அளிக்க டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவ துறை பேராசிரியர் ஜி.சி. கில்நானி, மயக்கவியல்துறை பேராசிரியர் அஞ்சன் திர்கா மற்றும் இருதயவியல் சிறப்பு நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோர் சென்னை வர உள்ளதாக கூறப்படுகிறது.

 நிதிஷ் நாயக், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் தனி மருத்துவராக இருந்துள்ளார்,

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top