அம்மா விவகாரத்துல எதையோ மறைக்கிறார்களோ என்ற சந்தேகம்
‘அமைச்சர்களுக்கு மட்டுமல்ல... எங்களுக்கும் அவர் அம்மாதான்...!’ -
கொதிக்கும் அதிமுக தொண்டர்கள்
தமிழக முதல்வர் ஜெயலலிதா, திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோவில் சேர்க்கப்பட்டதில் இருந்து தமிழகம் முழுக்க பரபரப்பு நிலவுவதாக அறிவிக்கப்படுகின்கிறது.
அப்போலோ மருத்துவமனை அமைந்துள்ள, கிரீம்ஸ் சாலை முழுவதும் அதிமுக தொண்டர்களும், பலதரப்பட்ட வி.ஐ.பி.களும் குவிந்துள்ளனர்.எந்நேரமும் பொலிஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அப்பல்லோ மருத்துவமனையின் நுழைவு வாயிலுக்கு முன்பு பொலிஸார் தடுப்பு அமைத்துள்ளனர். தடுப்பைத் தாண்டி மருத்துவமனைக்குச் சென்று முதல்வரின் உடல் நிலை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அதிமுகவினரின் எண்ணமாக இருக்கிறது. அதனால்,மருத்துவமனை உள்ளே அனுமதிக்கக் கோரி தொண்டர்கள் பொலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது அன்றாடக் காட்சியாக இருப்பதாகவும் கூறப்படுகின்றறது.
தடுப்புக்கு முன்பாக நிறுத்தப்படும் தொண்டர்கள், மருத்துவமனை வாசலைப் பார்த்தபடியே மணிக்கணக்காக காத்துக்கிடக்கின்றனராம்.
முதல்வரின் உடல் நிலை குறித்து செய்தி சேகரிக்க செல்லும் செய்தியாளர்கள், மாவட்ட செயலாளர்கள், இதர கட்சி நிர்வாகளிடம் எல்லாம், 'அம்மா எப்படி இருக்காங்க?' என்று தொண்டர்கள் விசாரித்தபடியே இருக்கின்றனராம்.
தினமும் அப்பல்லோவுக்கு வருவதும், அனுமதி மறுப்பால் 'கேட்' டிலேயே காத்திருந்து பொலிஸாருடன் வாக்குவாதம் செய்துவிட்டு திரும்பும் சென்னையைச் சேர்ந்த தொண்டர் ஒருவர்
தெரிவித்துள்ளதாவது,.
"அம்மாவை அனுமதித்த அந்த வியாழக்கிழமை (22-ந்திகதி) இரவிலிருந்து நானும் விடாமல் இங்கே வந்து போய்க் கொண்டிருக்கிறேன். உள்ளே போக அனுமதி மறுக்கிறார்கள்.
அப்பல்லோவுக்கு வந்தவங்களை தடுத்து நிறுத்தி,கட்சி நிர்வாகிங்க வீட்டுக்குப் போகச் சொன்னதால 23ம் திகதி எல்லோரும் அங்கிருந்து கிளம்பிப் போயிட்டோம். 'கூட்டம் சேர்றது அம்மாவுக்குப் பிடிக்காது... அம்மாவே உங்களை வீட்டுக்குக் கிளம்ப சொல்றாங்க'ன்னு அழுத்திச் சொன்னதாலதானே நாங்க கிளம்பினோம்.
எங்களையெல்லாம் போகச் சொல்லிட்டு, 28ம் திகதியும் 29ம் திகதியும் மட்டும் ஏன் அத்தனை அமைச்சர்களும் மருத்துவமனைக்கு ஓடி வந்தாங்க... அவங்க எங்களுக்கும்தானே அம்மா! அமைச்சர்களுக்கும் , மாவட்டச் செயலாளருக்கும் மட்டும்தான் அம்மாவா!
அம்மா விவகாரத்துல எதையோ மறைக்கிறார்களோ என்ற சந்தேகம் அ.தி.மு.க தொண்டர்களான எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அம்மா ஹெல்த் சம்மந்தமா ஹாஸ்பிட்டலில் கொடுக்கும் அறிக்கையை மட்டும்தான் இப்போதைக்கு நம்ப வேண்டிய நிலையில் இருக்கிறோம். பத்து நாள் ஓடிப்போச்சு. 'நான் நல்லா இருக்கேன்' னு அம்மாவின் வாய்ஸை வாட்ஸ்அப் மூலமாவது ரிலீஸ் பண்ணுங்க... " என்று கொதிக்கிறார் அந்த தொண்டர்.
0 comments:
Post a Comment