உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து சிறப்பித்தார்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ் அவர்களின் நிதியொதுக்கீட்டில் பள்ளிவாசல்கள், பௌத்த ஆலயங்கள், கிறிஸ்தவ, இந்து கோயில்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு நிதியுதவி மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மோதரை ஆனந்தா கல்லூரியில் நேற்று 19 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான் மற்றும் சகல மதங்களையும் சேர்ந்த மதகுருக்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top