பல்கலைக்கழக
கல்வியாண்டு
ஒக்டோபர்
1ம் திகதியிலிருந்து ஆரம்பம்
2016-2017 பல்கலைக்கழக கல்வியாண்டுக்கென
71 ஆயிரத்து 111 மாணவர்கள் விண்ணப்பம்
பல்கலைக்கழக
கல்வியாண்டு ஒக்டோபர் 1ம் திகதியிலிருந்து ஆரம்பிக்க
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டு
வருவதாக ஆணைக்குழுவின்
தலைவர் மொஹான்
டி சில்வா
தெரிவித்துள்ளார்.
இதற்காக
கல்வி அமைச்சுடன்
இணைந்து பல்கலைக்கழக
மானியங்கள் ஆணைக்குழு இது தொடர்பாக தேவையான
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் தலைவர்
குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த
வருடம் ஒக்டோபர்
மாதம் முதல்
இந்த வேலைத்திட்டத்தை
அமுல்படுத்துவது நோக்கமாகும் என்றும் சர்வதேச மட்டத்திலான
பல்வேறு பல்கலைக்கழகங்கள்
ஒக்டோபர் மாதத்திலேயே
கற்றல் நடவடிக்கைகளை
ஆரம்பிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2016-2017 பல்கலைக்கழக கல்வியாண்டுக்கென
71 ஆயிரத்து 111 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள்.
உயர்தரப் பரீட்சையை
ஆரம்பிப்பதற்கு முன்னர் இவர்களை பதிவு செய்வது
இலக்காகும்.
பகிடிவதையை
ஒழிக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக சமூகத்தில்
இடம்பெறும் பாலியல் ரீதியான வன்முறைகள், அச்சுறுத்தல்கள்
என்பனவற்றை முறைப்பாடு செய்வதற்கான பொறிமுறையையும் ஆணைக்குழு
அறிமுகம் செய்துள்ளது.
0 comments:
Post a Comment