இந்து சமுத்திர பிராந்திய அரச தலைவர்கள் மாநாட்டில்
ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன
இந்து சமுத்திர வலய நாடுகளின் நிலையான மற்றும் சமமான அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்து சமுத்திர வலய அரச தலைவர்கள் மாநாடு இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் இன்று ஆரம்பமானது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டார்.
மாநாட்டுக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை இந்தோனேசியா ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ வரவேற்றார்.
இந்து சமுத்திர பிராந்தியத்தைச் சேர்ந்த 21 நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்களும், பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
0 comments:
Post a Comment