முல்லைத்தீவு, கேப்பாபுலவு பிரதேசத்தில்
42 ஏக்கர் காணி அரசாங்க அதிபரிடம் கையளிப்பு
- இராணுவ பேச்சாளர்தெரிவிப்பு
முல்லைத்தீவு, கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுpகளிலுள்ள
42 ஏக்கர் காணியை உரிய மக்களிடம் கையளிப்பதற்காக அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மகாநாட்டில் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன இதனைத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் கேப்பாபுலவு காணி விடயம் தொடர்பாக வினாவிய போதே இராணுவ பேச்சாளர் இதனை குறிப்பிட்டார்.
காணியை மீளப்பெறுவதற்காக போராட்டம் நடத்திய மக்களிடம் காணி கையளிக்கப்பட்டுவிட்டதா என்ற கேள்விக்கு பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன பதிலளிக்கையில் இது பற்றிய விபரங்கள் அறியப்படவில்லை ஆனால் காணியை உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கெதள்ளப்பட்டுள்ளது என்றார்.
இராணுவ முகாம் இங்கிருற்து அகற்றப்படுமா?
அகற்றப்படமாட்டாது. இங்கு விமானப்படை முகாம் விமான ஓடுபாதையும் உண்டு. பலாலி இராணுவ முகாம்பகுதியில் மக்கள் எவ்வாறு குடியமர்ந்துள்ளார்களோ அவ்வாறே இப்பகுதியிலும் மீளக்குடியமர்வார்கள் என்று இராணுவ பேச்சாளர் கூறினார்.
இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான காணியை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காணியை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட குழுவினர் நேற்று சென்று பார்வையிட்டனர்.
மக்களின் காணிகளை வழங்குமாறு ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு வழங்கிய உத்தரவையடுத்து நேற்றைய தினம் காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
விமானப்படையினர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி அதிகாரிகள் இணைந்து மக்களின் காணிகளை அடையாளப்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளனர்.
விமானப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட தமது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரி கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் , கடந்த 29 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் எம்பிக்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்திருந்தனர்.
இதனைத்தொடாந்து மக்களின் காணிகளை ஓரிரு தினங்களில் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், முப்படையினருக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.
0 comments:
Post a Comment