459 டன் பயண சாமான்கள், 1500 நபர்கள், தங்கத்தாலான படிக்கட்டு

சவூதி மன்னரின் இந்தோனேசிய ஆடம்பர சுற்றுப்பயணம்

அரசு முறை பயணமாக இந்தோனேசியா சென்றிருக்கும் சவூதி மன்னர் தன்னுடன் 459 டன் பயண சாமான்களையும் 1500 பேர் கொண்ட அமைச்சர் குழுவினரையும் தங்கத்தாலான நகரும் படிக்கட்டையும் கொண்டு சென்றுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசியாவுக்கு கடந்த 50 ஆண்டுகளில் சவூதி மன்னர் ஒருவர் அரசு முறை பயணமாக செல்வது இதுவே முதல் முறையாகும்.
இந்தோனேசியாவில் 9 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் 6 நாட்கள் அங்குள்ள பாலி தீவில் ஓய்வு எடுக்கிறார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
சவூதி மன்னருடன் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், இளவரசர்கள் உள்ளிட்ட 1500 பேர் உடன் செல்கின்றனர். மட்டுமின்றி பயண சாமான்களாக மட்டும் 459 டன் பொருட்களை எடுத்து சென்றுள்ளனர்.
சவூதி மன்னர் பயன்பாட்டுக்கென 2 சொகுசு ரக கார்களையும் கொண்டு சென்றுள்ளார்.
சவூதி மன்னரின் இந்த 3 நாள் அரசு முறை பயணத்தில் 25 பில்லியன் அளவுக்கு முதலீட்டை இந்தோனேசிய அரசு எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
சவூதி மன்னர் தங்கியுள்ள ஹொட்டலுக்கு 10,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மட்டுமின்றி உணவு தயாரிக்கும் பொருட்டு 150 சமையல் கலைஞர்களை ஈடுபடுத்தியுள்ளனர்.
மன்னருடன் 36 இளவரசர்கள் மற்றும் இளவரசிகள், 10 மந்திரிகள், 800 பிரதிநிதிகள் சென்றுள்ளனர். அது மட்டுமல்லாமல், மன்னருக்கும், மன்னரின் குடும்பத்தினருக்கும் பணிவிடைகள் செய்வதற்காக 572 பணியாட்கள் சென்றுள்ளனர். பிரதிநிதிகள், பணியாட்கள் என அனைவரையும் சேர்த்த மொத்தம் 1,500 பேர் மன்னருடன் இந்தோனேசியா சென்றுள்ளனர்.
இந்தோனேசியா சுற்றுப்பயணத்தை முடித்த பின்னர் சவூதி மன்னர் சல்மான், ஜப்பான், சீனா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

KING SALMAN'S LAVISH NINE-DAY TRIP TO INDONESIA

 - Due to the size of the operation, King Salman is taking seven planes
- His huge entourage will stay in four luxurious hotels om Jakarta
- It has been reported up to 100 security personnel will guard King Salman
- The king's safety is such a priority that 10,000 Indonesian police officers will be deployed including soldiers to make sure the visit is secure
- The House of Representatives has installed a special seat for his speech
- A portable ramp has also been fitted to the House at the king's request
- At the Istiqlal Mosque, an elevator and a special toilet have been fitted
- Two Mercedes-Benz s600 limousines have made the trip for transport
- As well as the entourage, 800 delegates have travelled from Saudi Arabia
- An airfreight company had to set aside 572 members of staff for the cargo










0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top