உத்தமாபிவந்தனாதேசிய நிகழ்வு

ஜனாதிபதி தலைமையில்

தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக துணிவுடன் எழுந்து நின்று வரலாற்று முக்கியத்துவமிக்க போராட்டங்களுக்கு பக்கபலமாக இருந்ததை குற்றமாகக் கருதி ஏகாதிபத்தியவாதிகளினால் தேசத் துரோகிகள் என பெயரிடப்பட்ட 82 வீரர்களை உண்மையான தேசப்பற்றாளர்கள் என மீண்டும் பிரகடனப்படுத்தும் உத்தியோகபூர்வ வர்த்தமானியில் நேற்று (01) பிற்பகல் கண்டியில் உள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க மகுல் மடுவையில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கைச்சாத்திட்டார்.
தேசத்தின் சுதந்திரத்தையும் இறைமையையும் பாதுகாப்பதற்காக போராடியதன் காரணமாக ஏகாதிபத்தியவாதிகளினால் தேசத் துரோகிகளாக வர்த்தமானியின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த வீரர்களை அந்த அவமானத்திற்குரிய பெயரிடலில் இருந்து விலக்களிக்கும் தேசிய பொறுப்பு கடந்த சுமார் இறுநூறு வருட காலமாக நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.
அந்த வகையில் இவ்வருடம் மார்ச் மாதம் 02ஆம் திகதி உடரட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 202 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு அந்த வீரர்களுக்கு உரிய கௌரவத்தை வழங்கும் வகையில் இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க வர்த்தமானியில் ஜனாதிபதி கைச்சாத்திட்டார்.
 ‘உத்தமாபிவந்தனாஎன்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த தேசிய நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், வரலாற்றின் ஒரு சோகமான குற்றம் சரி செய்யப்பட்டுள்ள இன்றைய தினம் இலங்கை சிங்கள பௌத்த மக்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு தினமாகும் எனக் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னரே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய இப்பொறுப்பை இன்றைய தினம் நிறைவேற்றக் கிடைத்திருப்பதையிட்டு தனது மகிழ்ச்சியை வெளிட்ட ஜனாதிபதி, அன்று சுதந்திர போராட்டத்தில் தாய் நாட்டுக்காக முன்வந்த வீரப்புருஷர்களைப் போன்று பயங்கரவாத்திற்கு எதிரான 30 வருட போராட்டத்தில் உயிர்களை தியாகம் செய்து போராடிய படை வீரர்களையும் நாம் கௌவரத்துடன் நினைவுகூர வேண்டுமெனக் குறிப்பிட்டார்.
உடரட்ட கிராம புனருத்தாபன ஆணைக்குழு கடந்த காலப் பகுதியில் கலைக்கப்பட்டிருந்த காரணத்தினால் உடரட்ட பிரதேச அபிவிருத்தி பின்னடைந்து இருப்பதாக மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகா நாயக்க தேரர்கள் உள்ளிட்ட மூன்று நிக்காயாக்களையும் சேர்ந்த மகா சங்கத்தினர் வழங்கிய ஆலோசனைக்கேற்ப அந்த நிறுவனத்தை மீண்டும் தாபிக்குமாறு தாம் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி தலதா மாளிகையை அண்மித்த காணிகளின் பிரச்சினைகள் குறித்து மகா சங்கத்தினர் தெரிவித்ததற்கு ஏற்ப அவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
மகா சங்கத்தினரின் பிரித் பாராயனத்திற்கு மத்தியில் இந்த வர்த்தமானி அறிவித்தலில் கைச்சாத்திட்ட ஜனாதிபதி, மகா சங்கத்தினர் மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் புகைப்படத்திலும் தோற்றினார்.
அதனைத் தொடர்ந்து தலதா மாளிகை வளாகத்தில் உள்ள வாரியபொல ஸ்ரீ சுமங்கல தேரரின் உருவச் சிலைக்கும் கெப்பட்டிப்பொல நிலமேயின் நினைவுத் தூபிக்கும் ஜனாதிபதி மலர் மாலை அணிவித்தார்.
அதனைத் தொடர்ந்துஉத்தமாபிவந்தனாதேசிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இங்கு விசேட அனுசாசன உரையை நிகழ்த்திய மல்வத்தை மற்றும் அஸ்கிரிய அனுநாயக்க தேரர்கள் வரலாற்றினால் உருவாக்கப்பட்ட ஒரு தலைவர் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை பாராட்டினர்.
மல்வத்தை அஸ்கிரிய அனுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, கயந்த கருனாதிலக்க, லக்ஷ்மன் கிரியெல்ல. எஸ்.பி.திசாநாயக்க, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவித்தான, மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க, முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top