புதிதாக 85 அரசியல் கட்சிகள் பதிவுசெய்வதற்காக
தேர்தல் திணைக்களத்திற்கு விண்ணப்பம்
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக தேர்தல் திணைக்களத்திற்கு 85 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என. தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி மாதம் 1ம் திகதி முதல் 28ம் திகதி வரை இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. 28ம் திகதிக்கு முன்னர் தபாலில் சேர்க்கப்பட்;ட விண்ணப்பங்கள் இதுவரையில் ஆணைக்குழுவுக்கு வந்து சேரவில்லை. அவற்றை ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கூடி தீர்மானம் மேற்கொள்ளும்மென்றும் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் கட்சி ரீதியில் பதிவு செய்வதற்கு தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ளதா என்பது குறித்து கவனத்திற் கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு சில காலம் செல்லும் என்றும் இது குறித்து நேர்முகப் பரீட்சையும் நடத்தப்படும் என்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment