இந்து சமுத்திர பிராந்தியஅரச தலைவர்கள்
மாநாட்டில்
ஜனாதிபதிஉரையாற்றியதுடன்அரச தலைவர்களுடன்
இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும்
ஈடுபட்டார்
இந்து
சமுத்திர பிராந்தியத்திலுள்ள
நாடுகளின் பேண்தகுமற்றும்
சமநிலையான அபிவிருத்தியைஇலக்காகக்கொண்டு
நடைபெறும் இந்து
சமுத்திர பிராந்தியஅரச
தலைவர்கள் மாநாடு
இன்று7ஆம் திகதி முற்பகல் இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில்ஆரம்பமானது.
இந்த மாநாட்டில்
இலங்கை ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன
அவர்கள் இன்று
(07) முற்பகல் 11.00 மணிக்கு உரையாற்றினார்.
இந்து
சமுத்திரத்தை அமைதியான, நிலையான மற்றும் சுபீட்சமிக்க
பிராந்தியமாக மாற்றுவதற்காக கடல்சார் ஒத்துழைப்பை பலப்படுத்தும்
உடன்படிக்கையிலும் அரச தலைவர்கள்
கையெழுத்திட்டனர். அதற்கு இலங்கையின்
உயர்ந்தபட்ச பங்களிப்பை வெளிப்படுத்தி ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன அவர்கள்
கையெழுத்திட்டார்.
இந்தோனேசியா
ஜகார்த்தா நகரில்
கோலகலமாக இடம்பெற்றவேளை
ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன அவர்கள்
மாநாட்டில் பங்குபற்றிய சில அரச தலைவர்களுடன்
இருதரப்பு பேச்சுவார்த்தைகளில்
ஈடுபட்டார்.
பங்களாதேஷ்
பிரதமர் ஷெயிக்
ஹஷீனா அம்மையார்,
அவுஸ்திரேலிய பிரதமர் டெர்ன்புல் அவர்கள், தென்னாபிரிக்க
ஜனாதிபதி ஜேகொப்
சூமா, இந்திய
உப ஜனாதிபதி
மொஹமட் ஹமீட்
அன்சாரி ஆகிய
அரச தலைவர்களுக்கும்
ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன அவர்களுக்குமிடையிலான
இருதரப்பு சந்திப்பு
இடம்பெற்றது.
0 comments:
Post a Comment