இன்று சர்வதேச வாய் சுகாதார தினம்



சர்வதேச வாய் சுகாதார தினம் இன்றாகும். ஆரோக்கியமான வாழ்விற்கு சிறந்த வாய் சுகாதாரம் என்பதே இம்முறை இதன் தொனிப்பொருளாகும்.
நாட்டில் வாயுடன் தொடர்புடைய நோயாளர்கள் பெருமளவில் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
95 சதவீதமானோர் பல் ஈறுகளில் தொடர்புட்ட நோய்களுக்கு உள்ளாகியிருப்பதாக அமைச்சின் புள்ளி விபரங்களில் தெரிக்கப்பட்டுள்ளது பாடசாலை மாணவர்களில் 65 சதவீதமானோர் வாய் சம்பந்தப்பட்ட நோய்க்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முரசு கரைதல், வாய்ப் புற்றுநோய் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டோர் பெருமளவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் ஆண்கள் மத்தியில் பெருமளவில் ஏற்படும் புற்று நோயில் வாய்ப் புற்று நோய் முதலிடம் வகிப்பதாக விசேட வைத்தியர் பிரசன்ன ஜயசேகர தெரிவித்தார்.



இதற்கு முக்கிய காரணமாக வெற்றிலை மெல்லுதல் என்றும் அவர் குறிப்பிட்டார். பாக்கு, புகையிலை, சுண்ணாம்பு போன்ற முக்கிய காரணமாகும். சுண்ணாம்பு புற்றுநோயை ஏற்படுத்துவதுடன் பற்களில் ஈறுகள் கரைவதற்கும் காரணமாக அமைந்துள்ளது. இவை கரைவதால் புற்றுநோய் இலகுவில் ஏற்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக பாக்கின் காரணமாக வாயில் ஈறுகளில் காயங்களுக்கு உள்ளாவதால் பாதிப்பு ஏற்படுகின்றது. இவ்வாறான நிலைமை க்லேஸ்மல பைப்ரோசியா என்ற நோயாகும்.
நாட்டின் கலாச்சாரத்துடன் பின்னிணைப் பிணைந்துள்ள வெற்றிலையை தடை செய்வது சிரமமான காரியமாகும். சும்பிரதாய நடைமுறையில் வெற்றிலை பாக்கிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது இதற்கான காரணமாகும். வாயில் மாற்றம் ஏற்படுதல், வெள்ளை, சிவப்பு தளும்புகள் ஏற்படல், குரலில் மாற்றம் போன்ற அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக வைத்தியரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென விசேடவைத்தியர் பிரசன்ன ஜயசேகர கேட்டுக்கொண்டுள்ளார். 
வாயில் மிளகாய் கடிபட்டவுடன் கூடுதலான எரிச்சல் ஏற்படுதல், வாய் திறப்பதற்கு சிரமப்படுதல் ஏற்படக்கூடும். இது குறித்து கவனத்திற் கொள்ளாத பட்சத்தில் புற்றுநோய்க்கான அடிப்படையாக அமையக்கூடுமென்றும் விசேட வைத்தியர் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

 சிறு பிள்ளைகள் சில சந்தர்ப்பங்களில் பாக்கு துண்டுகளை மெல்லுவதையும் காணக்கூடியதாக உள்ளது. இது குறித்து கூடுதலான கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top