வடக்கு கிழக்கு இணைவும்
முஸ்லிம் காங்கிரஸை சீண்டிமுடித்தலும்
நவாஸ்
சௌபி
முஸ்லிம்
காங்கிரஸ் மீதும்
அதன் தலைமையின்
மீதும் விமர்சனக்
குற்றச்சாட்டுகளையும் அரசியல் அபாண்டங்களையும்
சுமத்துகின்றவர்கள் அண்மைக்காலமாக ஊடகப்படுத்துகின்ற
ஒரு பிரசாரமாக
வடக்கு கிழக்கு
இணைவு இருக்கின்றது.
இதில்
முஸ்லிம் காங்கிரஸ்
தலைவர் ரவூப்
ஹக்கீம் வடக்கு
கிழக்கை இணைப்பதற்கு
சம்மதம் தெரிவித்துவிட்டார்
என்றும் அவர்
வடக்கு கிழக்கு
இணைவை ஆதரிக்கின்றார்
என்றும் தப்பான
முறையில் இந்த
பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இத்தகைய
கண்மூடித்தனமான பிரசாரங்களைச் செய்கின்றவர்கள்
முஸ்லிம் காங்கிரஸ்
கட்சிக்கு விரோதமானவர்களும்
எதிர் அரசியல்
செய்கின்றவர்களுமே ஆகும்.
இவர்கள்
முதலில், முஸ்லிம்
சமூகத்தின் அரசியல் விடுதலைக் குரலான முஸ்லிம்
காங்கிரஸ் எப்பொழுதும்
நிபந்தனையுடனான வடக்கு கிழக்கு இணைவு பற்றியே
பேசுகின்றது என்பதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
வடக்கு
கிழக்கு இணைவில்
அரசாங்கம் ஒரு
தீர்வை கொண்டு
வருமாயின் அதில் நிலத் தொடர்பற்ற
பெரும்பான்மை முஸ்லிம் மாகாணம் என்ற ஒரு
தீர்வை வடக்கு
கிழக்கிலுள்ள முஸ்லிம்களின் அரசியல் உரிமையாக பெற
வேண்டும் என்பதில்
அன்று பெரும்
தலைவர் மர்ஹும்
அஷ்ரஃப் அவர்கள்
இருந்த நிலைப்பாட்டிலேயே
இன்றுள்ள தலைவர்
ரவூப் ஹக்கீம்
அவர்களும் இருந்து
வருகின்றார்.
இதுதான்
வடக்கு கிழக்கு
இணைப்பில் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின்
தீர்வு மரபும்
நிலைப்பாடும் ஆகும்.
இது
இவ்வாறு இருக்க,
தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனுடன் ரவூப் ஹக்கீம்
பேச்சுவார்த்தை செய்துவிட்டார். வடக்கு கிழக்கை இணைப்பதற்கு
ரவூப் ஹக்கீம்
சம்மதம் தெரிவித்துவிட்டார்
என்றெல்லாம் வாய்குவந்தபடி சிறுபிள்ளைத்தனமான
பிரசாரங்களை செய்கின்றார்கள்.
முதலில்
வடக்கு கிழக்கு
இணைப்புச் சம்மந்தமாக
சம்மந்தனும் ரவூப் ஹக்கீமும் எங்கு பேசினார்கள்?
அதனோடு வேறு
யார் யார்
இருந்தார்கள்? இந்தச் சம்மதம் ரவூப் ஹக்கீம்
அவர்களினால் சம்மந்தன் ஐயாவுக்கு எப்போது எவ்விடத்தில்
வைத்துக் கொடுக்கப்பட்டது?
அதில் என்ன
பேசப்பட்டது? என்றெல்லாம் வெளிப்படுத்தக் கூடிய
பகிரங்க ஆதாரங்கள்
ஏதாவது இருக்கிறதா?
ஒன்றுமே இல்லாத
ஒன்றைப் பற்றி
எதற்கு இவ்வளவு
பொய்ப் பிரசாரங்கள்
செய்கின்றார்கள்.
அடுத்து,
சம்மந்தனும் ரவூப் ஹக்கீமும் பேசுகின்ற இடம்
என்பது வடக்கு
கிழக்கு இணைப்புக்கு
தீர்வினைப் பெறுகின்ற ஒரு இடமாக இருக்க
முடியுமா? இந்த
நாட்டில் அரசாங்கம்
ஒன்று இருக்கிறது
அந்த அரசாங்கம்
வடக்கு கிழக்கு
இணைப்புக்கு ஒரு பேச்சுவார்த்தை மேசையை அமைக்க
வேண்டும். அந்த
இடத்தில் இருந்து
கொண்டுதான் இதுபற்றிப் பேச வேண்டும்.
அவ்வாறில்லாது இது தொடர்பாக யார் யாரோடு
எங்கு பேசினாலும்
அது வெற்றியளிக்கும்
பேச்சாகுமா?
மேலும்
வடக்கு கிழக்கு
இணைவு என்பது
பேச்சுவார்த்தை மூலம் மட்டும் தீர்வு காணுகின்ற ஒரு விடயமல்ல. வடக்கு
கிழக்கை ஒரு
மாகாணமாக இணைக்க
வேண்டுமானால் அது பாராளுமன்றத்தின் மூன்றில்
இரண்டு பெரும்பான்மையினால்
நிறைவேற்றப்படல் வேண்டும். இதனை இன்றுள்ள பேரினவாத
சூழலில் பாராளுமன்றத்தில்
நிறைவேற்றிக்கொள்வது என்பதில் எவ்வளவு
சவால்கள் உள்ளது
என்பதையும் இதில் நாம் ஆழமாக பார்க்க
வேண்டி உள்ளது.
இந்தப்
பின்னணிகளுக்கு அப்பால், இலங்கையில் அதிகார ரீதியாக
தீர்வினை வேண்டி
நிற்கின்ற வடக்கு
கிழக்கு மாகாணங்களில்
வாழுகின்ற தமிழ்
முஸ்லிம் சமூகங்கள்
பேரினவாத பெரும்பான்மைச்
சமூகங்களின் பிரச்சினைகளுக்கு ஒன்றுபட்டு
முகம் கொடுத்தாலும்
உள்ளகரீதியாக இவ்விரு சமூகங்களும் தனித்தனியே அதிகார
ரீதியான பிரச்சனைகளை
நேருக்கு நேர்
எதிர்நோக்குகின்ற சமூகங்களாகவும் இருக்கின்றன.
இவ்வாறு
அடிமட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளையும் வைத்திருக்கின்ற தமிழ்
முஸ்லிம் சமூகங்களின்
அரசியலைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற
கட்சிகளின் தலைவர்கள் கீழ்மட்ட அல்லது உள்ளகப்
பிரச்சினைகளை முரண்பட்டும் முரண்படாமலும்
பேசவேண்டிய கட்டாயமும் அதற்கான நிர்ப்பந்தமும் இருக்கின்றது.
யுத்தம்
முடிவுற்ற பின்னும்
கடந்தகால கசப்பான
வரலாறுகள் அரசியல்
ரீதியாக தமிழ்
முஸ்லிம் என்ற
இரு சமூகங்களுக்குள்ளும்
பெருத்த சந்தேகங்களையும்
அச்சங்களையும் பெரும் சுவராக எழுப்பியே வைத்திருக்கிறது.
இந்நிலையில் இந்த நல்லாட்சியில் அதிகார ரீதியான
தீர்வினை பெறுவதில்
முதலில் அடிமட்டத்திலுள்ள
சில பிரச்சினைகளை
சம்மந்தப்பட்ட தரப்பினர்கள் என்றவகையில் பேசித் தீர்வு
காண வேண்டிய
கடப்பாடு சமூகக்
கட்சிகளின் தலைவர்களுக்கு இருக்கின்றது.
இத்தகைய
அடிமட்டப் பிரச்சினைகளை
அப்படியே புகைந்தவாறு
வைத்து மூடிவிட்டு
அதன்மேல் ஏறிநின்று
வடக்கு கிழக்கு
இணைவு பற்றியும்
அதன் தீர்வுபற்றியும்
பேசுவது அர்த்தமற்ற
முடிவுகளையே தரும். அத்தோடு கீழே புகைந்துகொண்டிருக்கின்ற
பிரச்சினைகளின் நெருப்பு மீண்டும் கொழுந்தவிட்டு எரியவும்
செய்யும்.
எனவே,
இந்த விடயத்தில்
முதலில் அடையவேண்டிய
மிக முக்கியமான
தீர்வு வடக்கு
கிழக்கில் வாழும்
தமிழ் முஸ்லிம்
சமூகங்களின் இன ஐக்கியமாகும். இதனை புரிந்துணர்வோடும்
விட்டுக்கொடுப்போடும் சிந்திக்காத சமூகத்தினால்
பெறவும் முடியாது.
மேலும் இந்நிலை
இவ்வாறே இருந்தால்
இதுவிடயத்தில் நிலையான ஒரு தீர்வினை பெறுவதில்
ஆட்சியாளர்கள் இவ்விரு சமூகங்களையும் விரோதிகளாக்கி அதில்
குளிர்காய்ந்து கொண்டுமிருப்பார்கள்.
இந்த
முக்கியத்துவத்தின் அடிப்படையில் இவ்விரு
சமூகங்களின் அரசியலை முன்னிலைப்படுத்துகின்ற
அரசியல் கட்சிகளும்
அதன் பிரதிநிதிகளும் உள்ளகரீதியாக
அடிமட்ட பிரச்சினைகளுக்கு
தீர்வுகாண வேண்டியதும்
அதற்காக பேசுவதும்
தவிர்க்க முடியாத
ஒரு தேவையாகும். அவ்வாறு
பேசுவது எமது
சமூகத்தை தாரைவார்த்துக்
கொடுப்பதாகவும் அடகு வைப்பதாகவும் ஒருபோதும் ஆகிவிடாது.
இவ்வாறுதான்
அண்மையில் கல்முனை
நகர அபிவிருத்தி
தொடர்பாக கல்முனைப்
பிரதேச தமிழ்
அரசியல் தரப்பினர்களிடம்
முஸ்லிம் காங்கிரஸ்
தலைவரும் அதன்
பிரதிநிதிகளும் பேசிய நிகழ்வையும் வடக்கு கிழக்கு
இணைப்பை பேசிய
ஒரு இடமாக
மாற்றி அதனை
பூதாகரமாக்கி பிரசாரம் செய்தார்கள்.
இவ்வாறு
முஸ்லிம் காங்கிரஸையும்
அதன் தலைமையையும்
வடக்கு கிழக்கு
இணைவு குறித்து
இவர்கள் சீண்டிமுடிப்பதிலுள்ள
பின்னணி என்ன
என்பதையும் மக்கள் அறியாதவர்கள் அல்ல.
அதாவது
முஸ்லிம் சமூகத்தின்
அரசியல் தீர்வு
குறித்த நிலைப்பாடுகளையும்
அதற்கான தேவைகளையும்
பேசுகின்ற ஒரு
அரசியல் கட்சியாக
சர்வதேச தரப்புடனும்
அரசாங்கத்துடனும் மற்றும் தமிழ் சமூகக் கட்சிகளுடனும்
முன்பிருந்த ஆயுத இயக்கங்களுடனும் பேச்சுவார்த்தையைச் செய்யக்கூடிய தகுதியை ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் மட்டுமே
பெற்றிருப்பது வரலாறு.
இந்த
தகுதியை முஸ்லிம்
காங்கிரஸ் அல்லாத
வேறு எந்தக்
கட்சிகளாலும் பெற முடியாது அத்துடன் மிக
இலகுவாக இந்த
இடத்திற்கு ஏனைய முஸ்லிம் கட்சிகளால் வரவும்
முடியாது. அப்படி
ஒரு நிலை
உருவானாலும் இந்த விடயத்தில் அவர்கள் இயலாதவர்களாகி
விடுவார்கள் என்கின்ற பலவீனமும் அவர்களிடத்தில்
முழுமையாக இருக்கிறது.
இதன்காரணமாக
முஸ்லிம் சமூகத்தின்
ஏகபிரதிநிதியாக அரசியல் அடையாளம் பெற்றுள்ள ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
கட்சியை முஸ்லிம்
சமூகத்தின் விரோதியாக காட்டுவதற்கும் அக்கட்சியின் மக்கள்
செல்வாக்கை சிதைப்பதற்கும் சதிகள் செய்கின்றவர்கள் வடக்கு
கிழக்கு இணைவுக்கு
முஸ்லிம் காங்கிரஸும்
அதன் தலைமையும்
சம்மதம் தெரிவித்துவிட்டது
என்று ஊகங்களையும்
அபாண்டங்களையும் பேசி வருகின்றார்கள் என்பதுதான் இதிலுள்ள
உண்மை ஆகும்.
இந்த
உண்மைகளை எல்லாம்
மூடிமறைத்துவிட்டு கிழக்குச் சுதந்திரம்
என்றும் கிழக்கு
விடுதலை என்றும்
கிழக்கை மீட்போம்
என்றும் தலைப்பு
வைத்து மேடை
போட்டு மக்களை
ஏமாற்ற முனைவதும்
தோற்றுப் போனவர்கள் செய்கின்ற ஒரு
வங்குறோத்து அரசியல் ஆகும்.
இதில்
கிழக்கு கிழக்காகவே
இருக்கிறது. யார் குரல் கொடுத்தும் அதைப்
பிரித்தெடுக்கும் நிலையில் அது இல்லை. யாருக்கும்
தெரியாமல் வடக்குடன்
திடீரென்று இரவோடு இரவாக இணைகின்ற மாய
நிலையிலும் அது இல்லை. இது இவ்வாறு
இருக்க, சும்மா
இருக்கும் கிழக்கை
மீட்போம் என்று
குரல் கொடுப்பது
சமூகத்திற்கு பெரும் தீர்வைப் பெற்றுக்கொடுத்தது போலாகிவிடாது அத்துடன் இவ்வாறு பேசுகின்றவர்கள்
சமூகக் காவலர்களாகிவிடவும்
முடியாது. இதற்காக
இவர்கள் பேசுகின்ற
பொய் பிரசாரங்களையும்
மேடைக் கூத்துகளையும்
நம்புவதற்கு மக்கள்
இவர்களை அறியாதவர்களுமல்ல.
இறுதியாக
வடக்கு கிழக்கு
இணைவு என்பது
முஸ்லிம்களின் அங்கீகாரம் இல்லாமல் ஒருபோதும் இணைக்கப்படமாட்டாது
என்பதிலும் அவ்வாறான ஒரு நிலையில் முஸ்லிம்களுக்கு
தனியான ஒரு
அதிகார அலகு
வழங்காமல் அது
நடைபெறமாட்டாது என்பதிலும் மக்கள் தெளிவான ஒரு
முடிவுடன் இருப்பதோடு,
இதற்கு மாற்றமாக
முஸ்லிம் காங்கிரஸும்
அதன் தலைமையும்
ஒருபோதும் செயற்படமாட்டாது
என்பதிலும்; உறுதியான நம்பிக்கையோடுமிருக்கிறார்கள்
நன்றி:
தமிழ் மிரர் (20.03.2017)
பர்ஷான் முஹம்மது, (அட்டாளைச்சேனை)
0 comments:
Post a Comment