ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான
தினேஷ் குணவர்தனவுக்கு ஒருவாரகால தடை
.
சபாநாயகரின் கட்டளைக்கு இணங்காமையால், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான தினேஷ் குணவர்தனவை, ஒருவாரத்துக்கு சபை நடவடிக்கைகளிலிருந்து இடைநிறுத்துவதற்கு சபையில் யோசனை முன்வைக்கப்பட்டது.
சபைமுதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவே யோசனையை முன்வைத்தார். இந்த விவகாரம் தொடர்பில் பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தவேண்டும என்று அமைச்சர் சரத் அமுனுகம கேட்டார்.
அதன்படி நடந்த வாக்கெடுப்பில் யோசனைக்கு ஆதரவாக 85 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் கிடைத்தன. 03 எம்.பிக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. 104 உறுப்பினர்கள் வாக்களிப்புக்கு வரவில்லை.
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால், நாடாளுமன்றில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், தினேஷ் குணவர்தனவை வெளியேறுமாறு சபாநாயகர் தெரிவித்தார்.
ஆனால் அவர் வெளியேற மறுத்த நிலையில் சபை ஒத்திவைக்கப்பட்டதுடன், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் பாராளுமன்றத்திற்குள் நுழைந்தனர்.
எனினும் அதிகாரிகள் தினேஷ் குணவர்தனவை நெருங்காமல் கூட்டு எதிர்க்கட்சியினர் அவரை சூழ்ந்து கொண்டதுடன் சபை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இதன்போதே தினேஷ் குணவர்தனவை வெளியேற்றுவதற்காக பாராளுமன்றில் வாக்கெடுப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான, தினேஷ் குணவர்தனவை, அவையிலிருந்து வெளியேறுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய உத்தரவிட்டிருந்த நிலையில், அவர், சபையை விட்டு வெளியேறாமையால், சபைக்குள் பொலிஸார் பிரவேசித்தனர்.
0 comments:
Post a Comment